பிரான்ஸ் வசம் ஈரோ கால்பந்துக் கோப்பை

Subscribe to Oneindia Tamil

ராட்டர்டாம்:

கோப்பையுடன் பிரான்ஸ் அணியினர்.
ஈரோ -2000 கால்பந்துக் கோப்பையை உலக சாம்பியன் பிரான்ஸ் வென்றது.

ஹாலந்தில் உள்ள ராட்டர்டாம் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இத்தாலியை 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ்தோற்கடித்தது.

கூடுதல் நேரத்தில் பிரான்ஸின் பதிலி ஆட்டக்காரர் டேவிட் டிரெஸிகெட் போட்ட "கோல்டன் கோல் மூலம் இந்த வெற்றியை பிரான்ஸ் பெற்றது.

அரையிறுதியில் ஹாலந்தை இத்தாலியும், போர்சுகல்லை பிரான்ஸும் தோற்கடித்து இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றன. கோப்பையை வெல்ல பிரான்ஸ்அணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது.

ஆனால், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் முதலில் கோல் போட்டி இத்தாலி முன்னிலை பெற்றது. பிரான்ஸின் ஆட்டத்துடன் ஒப்பிடும்போது இத்தாலியின்ஆட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை. இருப்பினும், 56-வது நிமிடத்தில் தனக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி இத்தாலி வீரர்மார்க்கோ டெல்விச்சியோ கோல் போட்டார்.

ஆட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியது. வெற்றி நமக்குத்தான் என்று இத்தாலி அணியினர் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், ஆட்டம் முடிய 3 நிமிடங்கள்இருந்தபோது பிரான்ஸ் வீரர் சில்வின் வில்டார்டு கோல் போட்டு சமன் செய்தார்.

இதையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் பிரான்ஸின பதிலி ஆட்டக்காரர் டேவிட் டிரெஸிகெட் கோல் போட்டு தனது அணிக்குஈரோ-2000 கோப்பையை பெற்றுத் தந்தார்.

1996-ம் ஆண்டு இதே போன்று கூடுதல் நேரத்தில் கோல்டன் கோல் போட்டு கோப்பையை வென்றதைப் போல் இந்த ஆண்டு பிரான்ஸ் கோப்பையைவென்றுள்ளது.

புதிய சாத-னை:

ஈரோ-2000 கோப்பையை வென்றதன் மூலம் பிரான்ஸ் மற்றொரு சாதனையைப் புரிந்துள்ளது. ஒரே நேரத்தில் உலகக் கோப்பையையும், ஈரோகோப்பையையும் வென்று அந்த அணி சாதனை படைத்துள்ளது.

1998--ல் தனது நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் பிரேஸிலை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்துஉலகக் கோப்பையை பிரான்ஸ் வென்றது. இப்போது ஈரோ கோப்பையையும் வென்றுள்ளது.

அரையிறுதியிலும், கூடுதல் நேரத்தில் ஸினேடின் ஸிடேன் போட்ட கோல்டன் கோல் மூலம் இறுதி ஆட்டத்துக்கு பிரான்ஸ் தகுதி பெற்றது என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஈரோ கோப்பையை வென்றதை அடுத்து பிரான்ஸ் நாடு முழுவதும் கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். நாடு முழுவதும் வெற்றிக்கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+