தமிழகத்தில் இன்று
ஜெ.விடமிருந்து பிரிக்க கருணாநிதி முயற்சி - செங்கோட்டையன்
சென்னை:
ஜெயலலிதாவிடம் இருந்து என்னை பிரிப்பதற்காகத்தான் என் மீது பொய் வழக்குபுனைந்துள்ளனர் என்று தனி நீதிமன்றத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்செங்கோட்டையன் வாக்குமூலம் அளித்தார்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன்.போக்குவரத்துக் கழகங்களுக்கு உதிரி பாகங்கள் வாங்கியதில் ஊழல் செய்துள்ளதாகஇவர் மீது தனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
முதலாவது தனி நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜீவாபோக்குரவரத்துக் கழகத்தில் 2.60 கோடி ரூபாய்க்கு நடந்த ஊழல் முறைகேடுகள்தொடர்பான விசாரணையில் செவ்வாய் கிழமை செங்கோட்டையன் ஆஜரானார்.
நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் கேட்ட கேள்விகளுக்கு செங்கோட்டையன்பதிலளித்தார். அப்போது செங்கோட்டையன் கூறியதாவது:
கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். 1977 முதல் 1996 வரை 5 முறைசத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய தொகுதிகளில் இருந்து சட்டமன்றஉறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவன். அந்த தொகுதி மக்களுக்கு நான் ஆற்றியுள்ளபணிகளை, எதிர்க் கட்சியினரும் பாராட்டுகின்றனர்.
1980 முதல்18 ஆண்டுகள் அதிமுக மாவட்டச் செயலாளராகவும், 8 ஆண்டுகள்கொள்கை பரப்புச் செயலாளராகவும், 4 ஆண்டுகள் துணைப்பொதுச்செயலாளராகவும் சிறந்த முறையில் செயல்பட்டுள்ளேன்
1982 முதல் 1984 வரை ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தலைவராக இருந்தபோது, அந்த ஒன்றியத்தை நஷ்டத்தில் இருந்து மீட்டு கோடிக்கணக்கில் லாபம் ஈட்டித் தந்தேன். அதற்காக அகில இந்திய பால் உற்பத்தியாளர்கூட்டுறவு சங்கத்தின் பாராட்டைப் பெற்றேன்.
அதிமுகவுக்கும், அதன் தலைமைக்கும் விசுவாசமாகவும், பம்பரம் போல் பணியாற்றக்கூடிய சிறந்த நிர்வாகியாகவும் இருந்துள்ளேன். கட்சி விசுவாசி என்று மக்கள் மத்தியில்பெயருண்டு. அதனால் என்னையும் இயக்கத்தையும் பிரிக்கவும், என் மூலம்இயக்கத்திற்கு களங்கம் ஏற்படுத்தவும் 1989ல் முதல்வராக இருந்தபோதே கருணாநிதிமுயன்றார். அப்போது அவரை நான் தாக்கியதாக வதந்தியை கிளப்பினார்.
என்னை ஜெயலலிதாவிடம் இருந்து பிரிப்பதற்காக இப்போது பொய் வழக்குபுனைந்துள்ளார். அதிமுகவில் செல்வாக்கு பெற்ற தூணாக விளங்கும் என்செல்வாக்கை குறைப்பதற்காக என் மீது இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது என்றார்செங்கோட்டையன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications