தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் - வாஜ்பாய்
சுயாட்சித் தீர்மானம் நிராகரிப்பு - பரூக் ராஜினாமா செய்ய கோரிக்கை
ஸ்ரீநகர்:
காஷ்மீர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சுயாட்சி தீர்மானத்தை மத்தியஅமைச்சரவை நிராகரித்ததை அடுத்து அம் மாநில முதல்வர் பரூக் அப்துல்லாராஜினாமா செய்யவேண்டும் என்று எதிர்ப்பு வலுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 1953-ம் ஆண்டுக்கு முன் இருந்த சுயாட்சி அதிகாரத்தைமீண்டும் வழங்கவேண்டும் என்று கோரும் சுயாட்சி தீர்மானம் அம் மாநிலசட்டப்பேரவையில் கடந்த வாரம் நிறைவேற்ப்பட்டது.
பின்னர் அத் தீர்மானம் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கும், குடியரசுத் தலைவர்மற்றும் பிரதமரின் பரிசீலனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. புதன்கிழமை காலைகூடிய மத்திய அமைச்சரவை சுமார் இரண்டரை மணி நேர ஆலோசனை மற்றும்விவாதத்துக்குப் பிறகு சுயாட்சி தீர்மானத்தை நிராகரித்தது.
மத்திய அரசின் இந் நடவடிக்கையை அடுத்து, சுயாட்சி தீர்மானத்தைக் கொண்டு வந்தஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.
அம் மாநிலத்தில் உள்ள ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி மற்றும் அனைத்துக் கட்சிஹுரியத் மாநாடு போன்ற அரசியல் கட்சிகள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
சுயாட்சி தீர்மானத்தை மத்திய அமைச்சரவை நிராகரித்ததை தோல்வியாகக் கருதிஅவர் ராஜினாமா செய்யவேண்டும் என்ற அவை கோரியுள்ளன.
ஹுரியத் மாநாட்டுக்கு கட்சிக்கும், இந்திய அரசுக்கும் இடையே நடந்த ரகசிய சதிப்பேச்சுவார்த்தையை அடுத்தே சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றுமக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி தெரிவித்தார்.
ஹுரியத் மாநாட்டுக்கு கட்சிக்கும், இந்திய அரசுக்கும் இடையே நடந்த ரகசிய சதிப்பேச்சுவார்த்தையை அடுத்தே சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றுமக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி தெரிவித்தார்.
இதற்கிடையே, சுயாட்சி தீர்மானம் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறத்தும்தேசிய மாநாட்டுக் கட்சியின் செயற்குழு புதன்கிழமை கூடி விவாதித்தது.
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சுயாட்சி தீர்மானத்தை நிராகரிக்கமத்திய அமைச்சருக்கு எந்த சட்ட உரிமையும் இல்லை. நாங்கள புதிதாக சுயாட்சிகேற்கவில்லை. ஏற்கெனவே இருந்த சுயாட்சி அதிகாரத்தை மீண்டும் வழங்கவேண்டும்என்றுதான் கேட்கிறோம் என்றார் பரூக் அப்துல்லாவின் சகோதரரும், மாநிலதொழில்துறை அமைச்சருமான ஷேக் முஸ்தபா கமால்.
தில்லி சென்றுள்ள பரூக், காஷ்மீர் திரும்பிற பிறகு சுயாட்சி தீர்மானம் பற்றிஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றர் கமால்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications