பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
பிணையாளிகளை விடுவிக்க பிஜி புரட்சியாளர்களுக்கு 2 நாள் கெடு
சுவா:
பிஜியில் இந்திய வம்சாவளி பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட பிடித்து வைத்துள்ள 27 பிணைக் கைதிகள் அனைவரையும் ஒப்படைத்துவிட்டு,நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற புரட்சிப்படையினருக்கு ராணுவம் இரண்டு நாள் கெடு விதித்துள்ளது.
பிஜியில் கடந்த மே 19-ம் தேதி புரட்சி ஏற்பட்டது. ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிப் படையினர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பிரதமர் மகேந்திரசவுத்ரி உள்பட பலரைப் பிடித்து வைத்துக் கொண்டனர்.
புரட்சிக்குப் பிறகு பிஜியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் ராணுவத்தின் கையில் ஆட்சி வந்தது. அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து பிணைக்கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட 27 பேர் விடுவிக்கப்படவில்லை.
பிஜி நாட்டவர்களைக் கொண்டு பிஜியில் புதிய ஆட்சி அமைந்தால்தான் பிணைக் கைதிகளை விடுவிப்போம் என்று புரட்சிப்படையினர் அறிவித்துவிட்டனர்.அப்போது பிணைக் கைதிகளை விடுவித்து உடனே சரணடையும்படி அவர்களுக்கு ராணுவம் ஒரு நாள் கெடு விதித்தது.
ஆனால், பிணைக் கைதிகளை புரட்சிப்படையினர் விடுவிக்கவில்லை. இந் நிலையில், பிஜி பிரதமராக அதே நாட்டைச் சேர்ந்த கராசே செவ்வாய்க்கிழமைநியமிக்கப்பட்டார். புதிய ஆட்சியில் இந்தியர்கள் யாரும் இடம் பெறமாட்டார்கள் என்று கராசே அறிவித்துள்ளார்.
இந் நிலையில், புரட்சிப் படையினர் தாங்கள் பிடித்து வைத்துள்ள பிரதமர் உள்பட 27 பிணைக் கைதிகளையும் உடனே விடுவிக்கும்படியும், தங்கியுள்ளநாடாளுமன்றக் கட்டடத்தை விட்டு வெளியேறவேண்டும் என்றும் அதற்கு இரண்டு நாள் கெடு விதித்திருப்பதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது.
புதன்கிழமை இரவு முதல் 48 மணி நேர கெடு அமலுக்கு வருகிறது. இதைப் புரட்சிக்காரக்களாக மன்னிப்புக் காலமாக கருதிக் கொண்டு உத்தரவைஏற்றுக் கொள்ளவேண்டும் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் பிலிபோ தராகினிகினி தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications