தமிழகத்தில் இன்று
சென்னை:
ரஜினி, கமல் எனக்கு ஆதரவாக இருப்பதால் நடிகர் சங்கத் தேர்தலில் எனது அணிவெற்றி பெறும் என்று நடிகர் விஜயகாந்த் கூறினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இம்மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.தலைவர் பதவிக்கு விஜயகாந்த், செயலாளர் பதவிக்கு நடிகர் சரத்குமார் ஆகியஇருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை ராதிகா, திடீரென்று போட்டியில்இருந்து விலகினார். விஜயகாந்த் அணி சார்பில் துணைத் தலைவர் பதவிக்குஎஸ்.எஸ்.சந்திரன், தமிழ்ச் செல்வி, பொருளாளர் பதவிக்கு கே.என்.காளை ஆகியோர்போட்டியிடுகின்றனர்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு சத்யராஜ், ரவளி, நெப்போலியன், பார்த்திபன்,அர்ஜூன், ராதாரவி, மன்சூர்அலிகான், வி.கே.ராமசாமி, செந்தில், நாசர்,ஆர்.சுந்தர்ராஜன், நடிகைகள் குஷ்பு, ரேவதி, மனோரமா மற்றும் பலர்போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் பொருளாளர் பதவிக்கு இயக்குனர் விசுவும், செயற்குழு உறுப்பினர்பதவிக்கு நடிகர் எஸ்.வி.சேகரும் திடீரென்று போட்டியிட மனுத் தாக்கல் செய்தனர்.விஜயகாந்த் அணியை எதிர்த்து இவர்கள் இருவரும் போட்டியிடுவதற்கு என்னகாரணம் என்பதை அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் காளை, முன்னாள் தலைவர் ராதாரவியின்ஆதரவாளர். ராதாரவியும், அவரது ஆதரவாளர்களும் நடிகர், நடிகைகளின்அதிருப்தியை பெற்றவர்கள். அவர்களை மீண்டும் சேர்த்துக் கொண்டு செயல்பட்டால்,நடிகர் சங்க கடன் அடைய வாய்ப்பு இல்லை. எனவே நாங்கள் போட்டியிடுகிறோம்என்று அவர்கள் விளக்கம் அளித்திருந்தனர்.
இதற்கு விஜயகாந்த் புதன் கிழமை பதிலளித்தார். அவர் கூறியதாவது:
நடிகர் சங்க கடனை அடைப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதும்தான்எங்கள் முதல் நோக்கம். ராதாரவி நல்லவரா கெட்டவரா என்பதல்ல பிரச்னை.இப்போது பேட்டி கொடுக்கும் விசுவும், சேகரும் நடிகர் சங்க கடனை அடைப்பதாகவாக்குறுதி கொடுத்தால் நாங்கள் போட்டியில் இருந்து விலகி விடுகிறோம்.எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது.
அரசியலில் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். அதற்காக அவர்களைசுற்றியிருப்பவர்களும் நல்லவர்கள் என்று எப்படி சொல்ல முடியும். தப்பானவர்களைதிருத்த முடியாதா? இப்போது கேள்வி கேட்பவர்கள் 14 ஆண்டுகளாக ஏன்போராடவில்லை? ராதாரவியை உங்களால் பதவியில் இருந்து இறக்க முடிந்ததா? என்மீது நம்பிக்கை இருப்பதாக சொல்கிறீர்கள். அது உண்மை என்றால் இதுபற்றி பேசக்கூடாது.
ஊட்டியில் படப்பிடிப்பில் இருந்த கமலஹாசனை சந்தித்துப் பேசினேன். "நான் என்னநினைக்கிறேனோ, அதைத் தான் ரஜினியும் நினைக்கிறார். நாங்கள் இருவரும் உங்கள்பக்கம் தான் என்று உறுதியளித்தார். எனவே தேர்தலில் எங்கள் அணியே வெற்றிபெறும் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications