யோகம் பயிலுவோம்
சாத்தூரில் பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து: 7 பேர் பலி
சாத்தூர்:
பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்:
சாத்தூர் அருகே உள்ள ஆனைக்குட்டம் என்ற ஊர் உள்ளது. இங்கு பட்டாசுகள்தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அங்குள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில்தீபாவளிக்காக பட்டாசு தயாரிக்கும் வேலை முழு வீச்சில் நடந்து கொண்டிருந்த போதுஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
இத் தொழிற்சாலையில் மொத்தம் 42 அறைகள் உள்ளன. இதில் 36 அறைகளில்பட்டாசு தயாரித்து வருகின்றனர். புதன்கிழமை காலை இதில் ஓர் அறையில் சிவகாசிஅருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த மந்திர மூர்த்தி( வயுது40), அவருடையமனைவி ராமுத்தாய் ( வயது 36) இவர்களின் மகள் வள்ளியம்மாள் (வயது 19), மற்றும்கார்த்திகைப்படடியைச் சேர்ந்த அலெக்ஸ்( வயது 22) ஆகிய நான்கு பேரும் வெடிகள்தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேலையில் ஈடுபட்டிருந்த போது வெடிகள்உரசிக் கொண்டதால் வெடிகள் தீப்பற்றி வெடிக்கத் தொடங்கின.
வெடி தயாரித்து வந்த நால்வரும் உடல் கருகி இறந்தனர்.அந்தஅறையும் தரை மட்டமானது. தீ அருகிலுள்ள அறைகளுக்கும் வேகமாகப்பரவியது.பக்கத்தில் இருந்த அறையில் வேலை செய்து கொண்டிருந்த தங்கலைச்சேர்ந்த 25 வயதான பாண்டி என்பவரும் இறந்தார்.
இந்த தீ விபத்தினால் மூன்றுஅறைகள் தரைமட்டமாகின. அருகில் இருந்த அறைகளில்வேலை பார்த்து வந்த செந்தில் குமார் (வயது 32), மரரியப்பன் (வயது 25) மற்றும் ரவி(வயது 36) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். சிகிச்சைக்காக சிவகாசியில்சேர்க்கப்பட்டதில் செந்தில் குமார் சிகிச்சைக்ககு பலனின்றி மருத்துவ மனையில்உயரிழந்தார். மற்ற இரண்டு பேரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
விபத்து நடந்தவுடன் டி.ஆர். ஓ. சந்திர சேகரன், சிவகாசி உதவி கலெக்டர்ஆஷிஸ்வச்சானி, கோட்ட தீயணைப்புத்துறை அதிகாரி காசிநாத துரை ஆகியோர்விரைவாக சென்று மீட்புப் பணியை முடுக்கிவிட்டனர். வெம்பக் கோட்டை காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீசார் இவ் விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலையின் லைசென்ஸ் பறிமுதல்செய்யபட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications