தெருவோரச் சிறுவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுகிறார் ஹிங்கிஸ்
பொகோடா:
கொலம்பியாவில் உள்ள தெருவோரச் சிறுவர்களின் நல்வாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அந் நாட்டுக்கு உலக மகளிர் டென்னிஸின் முதல் நிலைவீராங்கனை மார்ர்டினா ஹிங்கிஸ் செல்கிறார்.
உலகிலேயே மிகவும் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகமுள்ள நாடாக கொலம்பியா கருதப்படுகிறது. ஏழைநாடான அங்கு ஏராளமான தெருவோரச்சிறுவர்கள் வசிக்கின்றனர். அச் சிறுவர்கள் தங்களது தினசரி வாழ்க்கைக்காக சிறுசிறு திருட்டுகளில் ஈடுபடுகின்றனர்.
உள்நாட்டுக் கலவரத்தால் பல சிறுவர்கள் அனாதையாக விடப்படுகின்றனர். அவர்கள் தினந்தோறும் பிச்சை எடுத்துச் சாப்பிடும் நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டனர். சில சிறுவர்கள் கலவரக் கும்பலில் சேருகின்றனர்.
இதனால், அவர்கள் எதிர்காலத்தில் பெரிய குற்றவாளிகளாக மாறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தெருவோரச் சிறுவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றும் திட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டுள்ளது.
இத் திட்டங்கள் தொடர்பாக தெருவோரச் சிறுவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமாக ஜூலை 12-ம் தேதி முதல் கொலம்பியாவில்சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் மார்ட்டினா ஹிங்கிஸ்.
ஐக்கிய நாடுகளின் நல்லெண்ணத் தூதராக கொலம்பியா செல்லும் மார்ட்டினா ஹிங்கிஸ், அந் நாட்டின் தெருவோரச் சிறுவர்களைச் சந்திக்கிறார். அவர்களுடன்பேசி அவர்களது நல்வாழ்வுக்காகமேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களை விளக்கிக் கூறுகிறார்.
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஹிங்கிஸ் மேற்கொள்ள உள்ள இப் பயணத்துக்கு கொலம்பியாவின் முதல் பெண்மணி நோஹ்ரா புயானா டி பாஸ்ட்ரானஏற்பாடு செய்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications