தமிழகத்தில் இன்று
பணத்துக்கு புலிகள்...பதவிக்கு வாஜ்பாயா? வைகோவுக்குக் கண்டனம்
சென்னை:
பணத்துக்காக விடுதலைப் புலிகள், பதவிக்காக வாஜ்பாய் என்று வைகோ நாடகம் ஆடுகிறார் என்று அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிமுக - மதிமுக மோதல் தொடர்கிறது. புலி ஆதரவு மாநாடு நடத்திய மதிமுகவை தடை செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா ஒரு நாள் அறிக்கைவெளியிட்டார். அந்த அறிக்கைக்கு வைகோ சூடான பதிலறிக்கை வெளியிட்டார். இப்போது வைகோவுக்கு காட்டமான பதிலளித்து அதிமுக தரப்பில்காளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுக அவைத் தலைவர் காளித்து வியாழக் கிழமை வெளியிட்ட அறிக்கை இது:
ஓநாய்க்குஆட்டிக்குட்டி மீது தீராத பாசம். ஊளையிடும் நரிக்குத் தந்திரம் தெரியாதாம். இந்திய ஒருமைப்பாட்டின் மீது வைகோவுக்குக் காதலாம். கள்ளத்தோணி வைகோ கதை அளக்கிறார்.
மோசடி மனிதர் வைகோ தேசப் பக்தர் வேடம் போடுவது வெட்கக் கேடு. வைகோ குடும்பத்தில் தேசப் பக்தி என்பது அவர் பாட்டனோடு முடிந்தது.இப்போது வைகோ உடம்பில் ஓடுவதெல்லாம் தன்னலவெறி. மந்திரிபதவி வேண்டாமென்று சிலரை மந்திரியாக்கி அவர்களை ஆட்டிப் படைக்கும்அதிகார வெறி.
இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்கும் விஷச் செடிகளை வேரோடு களைந்தெறிய வேண்டும் என்பது தான் எங்கள் தலைவியின் கோரிக்கை. வைகோவின்சுயரூபத்தை தோலுரித்துக் காட்டியதும் அக்கனிப் பிசாசாக அலறுகிறார்.
நாட்டு நலம் சிறிதும் அற்ற வைகோவின்உள்ளம் முழுக்க விஷம் என்பதை மக்கள் அறியவில்லை என்று வைகோ நினைக்கிறார். வைகோஇந்தியாவின் இறையாண்மைக்கு கேடு இழைக்கும் விடுதலைப் புலிகள் மீது தனிப் பாசம் உடையவர் என்பது இந்தியப் பெருங்கடல் போல் எல்லோருக்கும்தெரியுமே.
கள்ளத் தோணி ஏறி இலங்கைக்கு போன அன்றே கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர் வைகோ. அன்றே அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவியைபறித்திருந்தால் நியாயம் பிறந்திருக்கும். இந்தியாவின் பிரபாகரன் என்று வர்ணித்துக் கொண்டும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக நடந்துகொள்வதும் நாணயமுள்ள இந்திய குடிமகன் செய்யும் செயலா?
தமீழத்துக்கு வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவு கொடுக்கும் வைகோ, தேசபக்தர் வேடம் போடுவது வாஜ்பாய் அரசில் தொடர்ந்து அங்கம் வகித்துக்கொள்ளை அடிக்கும் முயற்சி தானே. மாநாட்டில் தேச விரோதம் பெருக்கெடுத்து ஓடவில்லையா?.
ஜெயலலிதாவின் ஆணித்தரமான அறிக்கையைப் பார்த்து தேசமே திருப்தி அடைந்துள்ளதே. தென்னகத்தில் இருக்கும் தேசியத் தலைவர் ஜெயலலிதா என்றுவட நாட்டு மக்கள் வாழ்த்துகிறார்களே.
ஆட்டு மந்தையைக் காக்க ஓநாய்கள் புறப்பட்டு விட்டதாம். அநியாயக்காரர்கள் நியாயத்தின் பிரதிநிதிகளாம். பதவிக்காகப் பேசும்பச்சோந்திகளுக்கு வாயெல்லாம் பல்லாக இருக்கிறது. வைகோ போன்ற சந்தர்ப்பவாதிகள் தங்களை முகமூடிகளால் இன்னும் மறைத்துக் கொள்ளநினைப்பது பித்தலாட்டம்.
ஜெயலலிதா தேர்தலில் நிற்காமல் தடை விதிக்க வேண்டும் என்று பொய் வழக்குகளை புனைந்து கொண்டு ஆளாய் பறக்கும் கருணாநிதியும், அவரதுஎடுபிடி வைகோவும் அற்பத்தனமான கனவுகளில் சஞ்சரித்துக் கொண்டுள்ளனர்.அது ஒரு போதும் நடக்கப் போவது இல்லை. அவர்கள் இலவு காத்தகிளியாக ஏமாறுவது நிச்சயம்.
கருணாநிதியின் குடும்ப அரசியலை எதிர்த்து வைகோ முழங்கியதை நம்பி கருணாநிதியை எதிர்த்து பலியான உண்மைத் தொண்டர்களின் சாம்பல் மேடுகளின் மேல்நின்று கருணாநிதியோடு கட்டிப் பிடித்து வைகோ உறவாடுவது எதற்காக? அறிவாலயத்தைப் பிடிக்கப் புறவாசல் வழியாகப் புகும் செயல் அல்லவா?
பணத்துக்கு விடுதலைப் புலிகள் என்றும், பதவிக்கு வாஜ்பாய் என்றும் இன்னும் எத்தனை நாளைக்கு வைகோ நாடகம் நடக்கும். தேச விரோதச்செயல்களுக்காக விடுதலைப் புலிகளுக்குத் தகவல் தந்து ஆட்சி இழந்த கருணாநிதியும், அவரது சீடரென்று சொல்லிக் கொண்டு திரியும் வைகோவும் தேசபக்தி மிக்கவர்கள் மத்திய ஆட்சியில் அமரும் போது காராகிருகத்தில் (சிறையில்) பூட்டப்படுவார்கள் என்பது தான் எதிர்கால வரலாறு என்றுகூறியுள்ளார் காளிமுத்து.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications