யோகம் பயிலுவோம்
சியர்ரா லியோனிலிருந்து வைர ஏற்றுமதிக்கு ஐ.நா. தடை
ஐ.நா. சபை (நியூயார்க்):
சியர்ரா லியோனிலிருந்து வைரம் ஏற்றுமதி செய்வதற்கு 18 மாதங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்துள்ளது.
சியர்ரா லியோனில் ஏராளமான வைரச் சுரங்கங்கள் உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தில் இது முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது உள்நாட்டுப்போர் நடப்பதாலும், நாட்டில் அபரிமிதமாக இருக்கும் வைரத்தை விற்று ஆயுதங்கள் வாங்கப்படுவதாலும், இந்த ஏற்றுமதித் தடையை ஐ.நா. சபைகொண்டு வந்துள்ளது.
இதுதொடர்பாக புதன்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடந்தது. தடை விதிப்பது தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக 14 பேர்வாக்களித்தனர். மாலி நடுநிலை வகித்தது. சியர்ரா லியோனிலிருந்து வைரங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதற்கு லைபீரியா வழி வகுப்பதாகதெரிவிக்கப்பட்டதால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் மாலி புறக்கணித்தது.
தீவிரவாதிகள் அமைப்பான புரட்சிகர ஐக்கிய முன்னணியினரின் கட்டுப்பாட்டில் உள்ளவைரச் சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படும் வைரங்களைஏற்றுமதி செய்ய வேண்டுமானால், சியர்ரா லியோன் அரசு அமைக்கும் குழுவின் பரிசீலனைக்குப் பிறகே அனுமதி வழங்கப்படும்.
இதற்கிடையே, வைரங்களை மனதில் கொண்டே தீவிரவாதிகள் சண்டையிட்டு வருவதாக ஐ.நா. சபைக்கான சியர்ரா லியோன் தூதர் இப்ராகிம் கமாராகூறியுள்ளார். இந்தப் பிரச்சினைக்கு வேறு எதுவும் காரணம் அல்ல. வைரங்கள், வைரங்கள் மற்றும் வைரங்கள்தான் பிரச்சினை என்றார்.
இப்போது விதிக்கப்பட்டுள்ள தடை 18 மாதங்களுக்குப் பிறகு காலாவதியாகி விடும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications