தமிழகத்தில் இன்று
கே: மனிதாபிமான அடிப்படையில், சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் படிக்க த.மா.கா. நிதி உதவி அளித்துள்ளது பற்றி...?
ப: சட்டத்துக்கும், சமூகத்துக்கும் விரோதமாகச் செயல்பட்டு, குடும்பத்தை நிர்கதியாக விட்டவர்கள் பலர் இருக்கிறார்கள்: அவர்களில் இந்தஒரு குடும்பத்துக்கு மட்டும் கருணை என்று த.மா.கா. முடிவு செய்திருப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கலாம். அது என்ன காரணம் என்றுஎனக்குத் தெரியவில்லை.
கே: உள்துறை அமைச்சர் அத்வானி, ஈரோட்டில் நடத்திய ம.தி.மு.க. மாநாட்டில் கலந்து கொண்டது பற்றி தங்கள் கருத்து...?
ப: தவறு என்று நினைக்கிறேன்.
கே; மேதாவித்தனமானவர்கள் மட்டுமே துக்ளக் படிப்பார்கள் என்று என் நண்பன் கூறினான் உண்மையா...?
ப:அவர் சொன்னது துக்ளக் படிப்பவர்களைப் பற்றித்தான். எழுதுபவர்களைப் பற்றி அல்ல என்பதால் - ஒரு வேளை உண்மையாக இருந்தாலும் இருக்கலாம்.
கே: மன்னிக்கவும்! சோம்பேறி, சோப்ளாங்கி, சோமாறி - இவற்றிலிருந்து உங்கள் சோ எப்படி வேறுபடுகிறது?
ப: சோ ஆரம்பம்; "ம்பேறி", "ப்ளாங்கி", "மாறி"... இவையெல்லாம் இனிமேல்தான் வந்து சேர வேண்டும். ஆகையால், எனது நிலை தொடக்க நிலை.
கே: மரணத்துக்குப் பின், உயிர் எங்கே செல்கிறது? என்ன ஆகிறது?
ப: நீங்கள் நசிகேதஸும் அல்ல; நான் எமதர்மனும் அல்ல.
கே: தப்பு செய்த அனைவரும் அதற்குரிய தண்டனையை அனுபவிக்கிறார்களா...?
ப: கிடையாது. தப்பு செய்த மற்றவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருகிற நிலையில் உள்ள, தப்பு செய்தவர்களும் உண்டு.
கே: ராம் விலாஸ் பாஸ்வான் வனத்துறை அமைச்சராகியிருந்தால்...?
ப: காட்டிலாகா ஊழியர்களுக்கு, மரங்கள் இனாமாகத் தரப்பட்டிருக்கும். சந்தனக் காட்டு ஊழியர்கள், வீரப்பனின் கோபத்துக்கு ஆளாகியிருப்பார்கள்.
கே: பா.ஜ.க.வின் மதச்சார்பின்மை கொள்கை; காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களின் மதச்சார்பின்மை கொள்கை - வித்தியாசம் என்ன?
ப: ஹிந்துக்களிடையே உள்ள சகல ஜாதிகளின் ஓட்டும் தனக்கே வர வேண்டும் என்று இலக்கு வைத்து செயல்படுவது - பா.ஜ.க. வின்மதச்சார்பின்மை; ஹிந்துக்களில் சில ஜாதிகளின் ஓட்டும், சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த ஓட்டும் தனக்கே வர வேண்டும் என்று இலக்குவைத்து செயல்படுவது - காங்கிரஸ் போன்ற கட்சிகளின் மதச்சார்பின்மை.
கே: கருணாநிதி - ஜெயலலிதா ஆகிய இருவரின் சொத்துச் சண்டையின் முடிவு எப்படியிருக்கும் என்று கருதுகிறீர்கள்?
ப: எப்பொழுதும் போல, சொத்து அவர்களுடையதாக இருக்கும். சண்டை இரு கட்சிகளின் தொண்டர்களுடையதாக இருக்கும்.
கே: 2006-ல் துக்ளக் ஆட்சி அமைய நாம் இருவரும் சேர்ந்து பாடுபடுவோமா?
ப: வேண்டாம். தேவையே இல்லை. அதை மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
கே: ஆந்திர மாநிலத்தில் கிறிஸ்துவ கல்லறைகளை வன்முறையாளர்கள் இடித்துத் தள்ளியுள்ளனரே?
ப: கிறிஸ்துவ தேவாலயங்கள் தாக்கப்படுவதும், பாதிரிமார்கள் தாக்கப்படுவதும் ஆங்காங்கே, அவ்வப்போது நிகழந்து கொண்டே இருக்கின்றன.
அரசு சொல்கிற மாதிரி இது பாகிஸ்தானில் உளவாளிகளின் செயலாக இருந்தாலும் சரி - அல்லது எதிர்க் கட்சிகள் கூறுகிற மாதிரி, ஹிந்துஅமைப்புகளின் செயலாக இருந்தாலும் சரி - இந்த அநாகரிகம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டிய ஒன்று.
ஒரு சில சம்பவங்கள்தான் நடக்கின்றன என்று கூறி அரசு மெத்தனம் காட்டுவது விபரீதத்தில் போய் முடியும்.
கே: ஜெயலலிதா, தேர்தலில் போட்டியிட தடை வர வாய்ப்புகள் உண்டா?
ப: தடை வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. வருகிற தடை விலகி நிற்பதற்கும் வாய்ப்பு உண்டு.
கே: நடப்பதெல்லாம் கடவுள் செயல் எனும்போது, நடக்கின்ற அநியாய, அக்கிரமங்களுக்கு மற்றவர்களைக் குறை சொல்வது சரிதானா?
ப: அப்படி குறை சொல்பவர்களின் பேச்சும் கடவுள் செயலே. அதில் குற்றம் காணும் உங்களுடைய கேள்வியும் கடவுள் செயலே. இதை விளக்குகிற எனது பதிலும் கடவுள் செயலே.
கே: ஆட்சியில் பங்கு வேண்டும் என்று ப.சிதம்பரம் பேசியபடி நடக்குமா?
ப: கூட்டணி ஆட்சிக்கு கருணாநிதி சம்மதிக்கிறாரோ இல்லையோ - ஜெயலலிதா சம்மதிப்பதற்கு வாய்ப்பு இருப்பவதாகவே நினைக்கிறேன்.
கே: இத்தனை வழக்குகள் தன் மீது இருந்தும், எந்த தைரியத்தில் மீண்டும் தன் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று ஜெயலலிதா பேசுகிறார்?
ப: ஆளும் கட்சி பற்றி மக்களுக்கு இயல்பாகவே ஏற்படுகிற ஏமாற்றம், தனக்கு உதவும் என்று அவர் நம்புகிறார்.
கே: அவன் பெரிய மனிதன் என்கிறார்களே, இதற்கு என்ன அர்த்தம்?
ப: அவனோடு நமக்கு சரிப்பட்டு வராது - என்று அர்த்தம்.
கே: வருகிற தேர்தலில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் ப்ளஸ் பாயிண்ட்களாக இருக்கப் போவது என்ன?
ப: தி.மு.க.வுக்கு ப்ளஸ் பாயிண்ட் - அ.தி.மு.க. ஆட்சியைப் பற்றி மக்களுக்கு மிச்சம் மீதி இருக்கும் நினைவு. அ.தி.மு.க.வுக்கு ப்ளஸ் பாயிண்ட் - தி.மு.க.ஆட்சி பற்றி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற அதிருப்தி.
கே: பத்திரிக்கைகளுக்கும் ஐ.எஸ்.ஐ. முத்திரை வழங்கப்பட்டால்...?
ப: வேண்டாம், பாகிஸ்தான் உளவு ஏஜெண்டுகளுக்கும் ஐ.எஸ்.ஐ. என்றுதான் பெயர். இந்த முத்திரை பெறுவது பத்திரிக்கைகளுக்கு தர்மசங்கடமாகஇருக்கும்.
கே: பத்திரிக்கையாளர்கள் எல்லாம் சேர்ந்து மூன்றாவது அணி அமைத்தால், அதை ஆதரிக்க த.மா.கா. தயார் என்று மூப்பனார்கூறியுள்ளாரே?
ப: பத்திரிக்கையாளர்களிடம் அவர் ஏமாறவில்லை. ஏமாந்த மாதிரி நடிக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications