விம்பிள்டன்: டேவன்போர்ட் Vs
விம்பிள்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் விளையாட அமெரிக்காவின் தேவன்போர்ட் மற்றும் வீனஸ்வில்லியம்ஸ் இருவரும் தகுதி பெற்றுள்ளனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் இவர்கள் இருவரும் எளிதாக வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு தேவன்போர்ட் தகுதி பெற்றுள்ளார்.
முதல் அரையிறுதியில் வீனஸ் சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் இருவரும் மோதினர். முதல் சட்டை 6-2 என்ற கணக்கில்எளிதாக வென்றார் வீனஸ். ஆனால், இரண்டாவது செட்டில் அவருக்கு பலத்த எதிர்ப்பைக் காட்டினார் செரீனா.
இறுதியில் 6-6 என்ற சமநிலையில் இருவரும் இருந்தபோது டை-பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 7-3 என்ற புள்ளிகள் எடுத்து7-6 என்ற கணக்கில் அந்த செட்டை வீனஸ் வென்றார்.
இரண்டாவது அரையிறுதியில் நடப்புச் சாம்பியனான தேவன்போர்ட்டும் ஜெலீனா டோகிக்கும் மோதினர். இதில் 6-4, 6-2 என்ற கணக்கில்தேவன்போர்ட் வெற்றி பெற்றார். டோகிக்கிடமிருந்து எந்தவிதமான எதிர்ப்பும் தேவன்போர்ட்டுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீனஸ் வில்லியம்ஸ்-தேவன்போர்ட் இருவருக்கும் இடையேயான இறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன. சாம்ப்ராஸ்-ராப்டர், அகாஸி-வால்ட்ச்கோவ் ஆகியோருக்கும்இடையே இந்த ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications