மூன்று நாடுகள் கிரிக்கெட்: தெ. ஆப்பிரிக்காவிடம் பாகிஸ்தான் தோல்வி
கொழும்பு:
இலங்கையில் நடைபெற்று வரும் மூன்று நாடுகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்தது.
கொழும்பு, பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது.
காலிஸ் சிறப்பாக ஆடி 83 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்து துவக்க ஆட்டக்காரர் கிர்ஸ்டன் 52 ரன்களும், குல்லினன் 39 ரன்களும் எடுத்தனர்.பாகிஸ்தான் தரப்பில் அப்துர் ரஸாக் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 223 ரன்களே எடுத்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணியில் இம்ரான் நசீர் சிறப்பாக ஆடி 80 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியா, சயீத் அன்வர் 39 ரன்களும், யூனிஸ் கான் 38 ரன்களும்எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்க வீரர்கள் நிக்கி போயே 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் குளூசனர் 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகராக தென் ஆப்பிரிக்க அணியின் காலிஸ் தேர்வு செய்யப்பட்டார். இப் போட்டித் தொடரின் அடுத்த ஆட்டம் பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும்இடையே கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
யு.என்.ஐ.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications