தமிழகத்தில் இன்று
ஜப்பானில் எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், நிலச்சரிவு
டோக்கியோ:
ஜப்பானில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து நிலநடுக்கமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
தலைநகர் டோக்கியோவுக்கு 200 கிலோமீட்டர் தொலைவில் மியாகேஜிமா தீவில் உள்ள எரிமலை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென்றுவெடித்தது. கரும்சாம்பல் நிறப் புகையை எரிமலை கக்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் எரிமலைச் சாம்பலாலும், புகையாலும் மூடப்பட்டுள்ளது.
எரிமலை வெடித்த சில மணி நேரத்தில் மியாகேஜிமா தீவுக்கு அருகில் உள்ள கோஸுஷிமா மற்றும் நீஜிமா தீவுகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிச்டெர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் பாதிப்பு 6 என்று பதிவானது.
நிலநடுக்கம் ஏற்பட்ட கோஸுஷிமா தீவில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், நிலச்சரிவுஆகியவற்றால் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதைப் பற்றிய உடனடி தகவல் ஏதும் இல்லை.
இருப்பினும் சம்பவ இடங்களுக்கு மீட்புப் படையினர் சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புஉள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது.
ராய்டர்ஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications