தமிழகத்தில் இன்று
மக்கள் தலைவர் கருணாநிதி...தந்தைக்கு தனயன் "சர்டிபிகேட்
சென்னை:
தேர்தலுக்காக வியாபாரம் நடத்தும் கட்சித் தலைவர்கள் மத்தியில் மக்களுக்காக உழைக்கும்தலைவராக முதல்வர் கருணாநிதி விளங்குகிறார் என்று தந்தையை வெகுவாக புகழ்ந்து பேசினார் சென்னைநகர மேயர் ஸ்டாலின்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 77வது பிறந்த நாள் விழாவை திமுகவினர் பகுதிவாரியாக கொண்டாடி வருகின்றனர். தொடர் நிகழ்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் கருணாநிதியின் பிறந்தநாள் விழா சென்னை சேப்பாக்கம் பகுதியில் சனிக் கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி நடந்த பொதுக் கூட்டத்தில் சென்னை நகர மேயரும், திமுக இளைஞரணித் தலைவரும்,கருணாநிதியின் மகனுமான ஸ்டாலின் பேசினார்.
அவர் பேசுகையில், "நாம் இங்கே பொதுக் கூட்டம் தான் நடத்துகிறோம். ஆனால், மற்ற கட்சிகள்நடத்தும் மாநாடு போல் இங்கே கூட்டம் நிரம்பி வழிகிறது. இங்கே சில கட்சித் தலைவர்கள்இருக்கிறார்கள். தேர்தலுக்காக கூட்டத்தைக் காட்டி வியாபாரம் செய்கிறார்கள்.
திமுக அப்படிப்பட்ட கட்சி அல்ல. தேர்தல் வியாபாரம் நடத்தும் தலைவர்களுக்கு மத்தியில்கொள்கைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் உழைத்து வரும் தலைவராக கருணாநிதி திகழ்கிறார்.அவரது பிறந்த நாளை ஆண்டு முழுவதும் கொண்டாடும் திராணி திமுகவுக்கு உண்டு.
வழக்குகளில் சிக்கியுள்ள ஜெயலலிதா, டான்சி நிலத்தை வாங்கிய பத்திரத்தில் கையெழுத்தே போடவில்லைஎன்று நீதிமன்றத்தில் நீலிக் கண்ணீர் வடிக்கிறார். அவர் எந்தெந்த காலக் கட்டத்தில் என்னென்னபொய்களைச் சொல்லியுள்ளார் என்பதை நாடறியும்.
திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சிப் பள்ளிகளின் தரம் உயர்தத்ப்பட்டுள்ளது.மகன் கெட்டுப் போக வேண்டுமென்றால், மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்தால் போதும் என்ற நிலையைமாற்றியுள்ளோம் என்றார் ஸ்டாலின்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications