தமிழகத்தில் இன்று
போபர்ஸ் வழக்கில் இத்தனை குழப்பமா?
ஸ்டாக்ஹோம்:
போபர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்சினை எழுந்து 14 வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த வழக்குத்தொடர்பான தகவல் பரிமாற்றத்தில் மத்திய வெளியுறவு அமைச்சகம் குழப்பமாக உள்ளது.
போபர்ஸ் வழக்கு தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பப்பட்ட சிலர், அந்தவழக்கோடு தொடர்பே இல்லாதவர்கள். பலருக்கு மிகவும் தாமதமாக சம்மன் சென்றசேர்ந்துள்ளது. இவை அனைத்தும் இந்திய அதிகாரிகள் தரப்பில் செய்யப்பட்ட குழப்பம் என்று ஸ்வீடன்வெளியுறவுத் துறை கூறியுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத ஸ்வீடன் வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், போபர்ஸ் புகார்எழுந்து 14 ஆண்டுகள் ஆகியும் கூட வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யார், யாருக்கு சம்மன் அனுப்பவேண்டும் எனத் தெரியாமல் இந்திய அரசு இருப்பது வேதனையாக இருக்கிறது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலுள்ள இந்தியத் தூதரகம் சரியாக செயல்பட்டிருந்தால் இந்தக் குழப்பம்ஏற்பட்டிருக்காது என்றார் அவர்.
போபர்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் மார்ட்டின் ஆர்ட்போவுக்கு இதுவரை ஐந்து முறை சம்மன்அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவை அனைத்தையும் அவர் நிராகரித்து விட்டார்.
கடைசியாக ஜூன் 2-ம் தேதி அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கோரிசம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த சம்மனை, ஸ்வீடன் வெளியுறவு அமைச்சகத்திடம், ஜூன் 6-ம்தேதிதான்
ஸ்வீடனிலுள்ள இந்தியத் தூதரகம் கொடுத்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் எங்கு வந்துஆஜராக வேண்டும் என்ற விவரங்களும் அதில் இல்லை.
இதுகுறித்து இந்திய அதிகாரிகளிடம் ஸ்வீடன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் சுட்டிக் காட்டியும்,சரியாகத்தான் கொடுத்திருக்கிறோம் என்று பதில் வந்துள்ளது. இதனால் ஸ்வீடன் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.
இது பரவாயில்லை. போபர்ஸ் ஊழலுக்கே சம்பந்தமில்லாத ஒருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.அவர் ஜான் கில்பர்க். இப்போது நோபல் டெக் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். இவர்எப்போதோ ஏபி போபர்ஸ் நிறுவன்தில் பணியாற்றியுள்ளார். இந்த நிறுவனத்திடமிருந்துதான் இந்தியாபீரங்கிகள் வாங்கியது. ஆனால் இவருக்கும், பீரங்கி வாங்கிய ஒப்பந்தத்திற்கும் எந்த சம்பந்தமும்கிடையாது. ஆனால் இவருக்கும் ஒரு "காப்பி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications