தமிழகத்தில் இன்று
நீதிமன்றத்தில் ஜெ. வக்கீல்கள் ஏற்படுத்திய பரபரப்பு
சென்னை:
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாகச் சொல்லி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை நிறுத்தும்படி தனிநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் திடீர் கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வருமானத்துக்கு அதிமாக ரூ.66.5 கோடிக்கு சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதுதொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை, முதலாவது தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
புதன் கிழமை நடைபெற்ற விசாரணையில் அரசு தரப்பு சாட்சிகளை நீதிபதி ஆறுகப் பெருமாள் ஆதித்தன் விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது ஜெயலலிதா தரப்பு வக்கீல் ஒருவர் வேகமாக வந்து நீதிமன்றத்திற்குள் நுழைந்தார். ஏற்கனவேஅங்கு ஆஜராகியிருந்த ஜெயலலிதா தரப்பு சீனியர் வக்கீலின் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தார்.
அதையடுத்து உஷாரான அந்த வக்கீல்கள், இந்த வழக்கு விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி உயர் நீதிமன்றநீதிபதி வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்தள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே இத்துடன் விசாரணையை நிறுத்த வேண்டும்என்றனர்.
அதை கேட்ட நீதிபதி, எதுவாக இருந்தாலும் எழுத்து மூலமாக உறுதி செய்து மனு தாக்கல் செய்யுங்கள். விசாரணையை நிறுத்திவிடுகிறேன் என்றார்.
அதை ஆமோதித்த வக்கீல்கள் சொன்னபடி மனு தாக்கல் செய்யாததால் விசாரணையை நீதிபதி தொடர்ந்தார். 15 நிமிடங்களுக்குபின்னர் அரசு தரப்பு வக்கீல் ஜவகர்லால், உயர் நீதிமன்ற அரசு வக்கீல்களுடன் நாங்கள் இதுபற்றி விசாரித்தோம். அப்படி எந்தஉத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர் என்றார்.
இந்த பரபரப்புக்கு இடையில் மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன், தனது நற்பணி மன்றத்தினர் புடை சூழ நீதிமன்றத்தில் ஆஜரானார்.












Click it and Unblock the Notifications