தமிழகத்தில் இன்று
பாகிஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது தெ.ஆப்பிரிக்கா
கொழும்பு:
கொழும்பில் நடந்து வரும் மூன்று நாடுகள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் விளையாட தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றது.
புதன்கிழமை நடந்த கடைசி சுற்றுப் போட்டியில், பாகிஸ்தானை, 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் தென் ஆப்பிரிக்கா நுழைந்தது.
தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேவிட் டெர்பஜ், அபாரமாக பந்துவீசி, 20 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டெர்பஜ்ஜுக்கு, இது இரண்டாவது ஒரு நாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் துவக்க வரிசை ஆட்டக்காரர்களை டெர்ஜப் தினறடித்துவிட்டார். முதலில் ஆடிய பாகிஸ்தான் 44.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 37.3 ஓவர்களிலேயே தனது வெற்றி இலக்கை எட்டியது. இதற்காக மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.
கிர்ஸ்டன் எட்டு பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தார். கல்லினன் ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் எடுத்தார். ஜான்டி ரோட்ஸ் 12 ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார். முன்பு ஆடிய ஆன்ட்ரூ ஹால் 15 ரன்களும், கல்லிஸ் 27 ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் இறுதிப் போட்டிக்குள் தென் ஆப்பிரிக்கா நுழைந்துள்ளது. வெள்ளிக்கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில் இலங்கையைசந்திக்கிறது தென் ஆப்பிரிக்கா.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications