தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

சிறுவர்களுக்குக் கட்டாயப் போர்ப் பயிற்சி தருவதாக பெற்றோர் புகார்

கொழும்பு:

விடுதலைப் புலிகள் கட்டாயப்படுத்தித் தங்களது குழந்தைகளை புலிகள் இயக்கத்தில்சேர்ப்பதாக பல தமிழ்ப் பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர்.

பள்ளிகளில் படிக்கும் தமிழ்ச் சிறுவர்களை விடுதலைப் புலிகள், கட்டாயப்படுத்திஅழைத்துச் செல்வதாகவும், சில மாதங்களுக்குப் பிறகு அந்தச் சிறுவர்கள்,பிணங்களாகத்தான் திரும்பி வருகிறார்கள் என்று அந்தப் பெற்றோர்கள் கண்ணில் நீர்மல்கத் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மனித உரிமைப் பிரிவு ஆசிரியர்கள் தயாரித்துள்ளஅறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரில் முன்புசிறு ஆயுதங்களே அதிகம் பயன்படுத்தப்பட்டது. இதனால், குறைந்ததுஉடல்களையாவது பார்க்க முடிந்தது. ஆனால் இப்போது பீரங்கிகள் மற்றும்மார்ட்டர்களால் தாக்கப்படுவதால் சல்லடையாகத் துளைக்கப்பட்ட உடல்களையேபார்க்க முடிவதாக பல பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள பல பள்ளிகளில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள்நடந்து வருகின்றன. அங்குள்ள ஆசிரியர்களிடம் பாடம் எடுக்க வேண்டாம் என்றுவிடுதலைப் புலிகள் கூறியுள்ளனர். மாறாக, புலிகள் இயக்கம் பற்றியும், தமிழர்பிரச்சினை பற்றியும் போதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

வாரத்திற்கு மூன்று முறை 14 -15 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் கட்டாய ராணுவப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் புலிகள் கட்டளையிட்டுள்ளனர். ஒருமாதத்திற்குள்ளேயே துப்பாக்கிளைக் கழற்றி, மாட்டவும், கிரனெடுகளைப்பயன்படுத்தவும் மாணவர்கள் பழகிக் கொண்டு விடுகிறார்கள்.

மாணவர்களுக்கு ராணுவப் பயற்சி தருவதை ஆசிரியர்களோ அல்லது பெற்றோரோஎதிர்த்தால், அவர்களுக்கு புலிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

விடுதலைப் புலிகளைப் பொருத்தவரை, பணமோ அல்லது ஆயுதமோ ஒருபிரச்சினையே இல்லை. இவை இரண்டும் உலகம் முழுவதிலுமிருந்து அவர்களுக்குத்தடையில்லாமல் கிடைத்து வருகிறது. ஆனால் அவர்களுக்குப் போதுமான ஆட்கள்சண்டை போடுவதற்கு இல்லை. அதனால்தான் சிறுவர்களுக்கும் ஆயுதப் பயிற்சிகொடுத்து போருக்குத் தயார்படுத்துகிறார்கள் என்றும் அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+