தமிழகத்தில் இன்று
இந்திய-அமெரிக்க ராணுவ உறவுக்கு இதுவே நேரம் - அமெரிக்க எம்.பி
வாஷிங்டன்:
இந்தியாவுடன் ராணுவ உறவை ஏற்படுத்திக் கொள்ள அமெரிக்காவுக்கு இதுவே சரியான தருனம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த எம்.பி எட் ராய்ஸ்கூறியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் சர்வதேச விவகாரக் குழுவில் அவர் உறுப்பினராக உள்ளார். இந்திய அமெரிக்க அரசியல் கல்வி அமைப்பின் கோடைகாலக் கூட்டத்தில் எட் ராய்ஸ் பேசியதாவது:
இந்தியாவுடன் அமெரிக்கா, ராணுவ ரீதியிலான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு இதுவே சரியான தருணம். இந்தியாவுடன், சீனாபிரச்சினை செய்தால், அதற்கு இந்த உறவு பலமாக இருக்கும். இந்தியாவின் பக்கத்தில் இருக்கும் நாடுகள் ஆபத்தானவை என்பதை அமெரிக்காநினைவில் கொள்ள வேண்டும்.
அமெரிக்காவுடன் உறவை பலப்படுத்திக் கொள்ள இந்தியா ஆர்வம் காட்டுகிறது. கூட்டாக ராணுவப் பயற்சிகளை மேற்கொள்ளவும் விருப்பம்தெரிவித்துள்ளது.
1995 மற்றும் 1996-ல் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டாக ராணுவப் பயிற்சி மேற்கொண்டன. ஆனால் இது போதாது. இன்னும்நிறைய பயிற்சிகளை இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்.
வியட்நாமுடன், இந்த ஆண்டின் இறுதியில், கடற்படைப் பயிற்சி மேற்கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்காக தனது போர்க் கப்பலை தெற்கு சீனக்கடலுக்கு அனுப்பவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் அமெரிக்காவும் கலந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான நண்பர்கள். ஆனால் சீனாவும், அமெரிக்காவும் அப்படி இருக்க முடியாது.
இன்னும் 22 வருடங்கள் காத்திருக்காமல், அடுத்த அமெரிக்க அதிபர் பதவியேற்றவுடன், முதலில் இந்தியாவுக்குச் செல்ல வேண்டடும்.இந்தியாவுடனான உறவைப் பலப்படுத்திக் கொள்ள அமெரிக்கா முன்னுரிமை கொடுத்துச் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications