தமிழகத்தில் இன்று
சோனியா உயிருக்கு ஆபத்து ... சுவாமி பயமுறுத்துகிறார்
சென்னை:
அர்ஜூன் சிங்கை காங்கிரசை விட்டு வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் சோனியா உயிருக்கு ஆபத்து என்று திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்சுப்ரமணியசாமி.
ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி சென்னையில் வியாழக் கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. இதனால் இங்குள்ள கட்சிகள் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசி வருகின்றன.மற்றகட்சிகளும் புலிகள் விஷயத்தில் தங்களது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
முன்னாள் மத்திய அமைச்சர் அர்ஜூன்சிங்கிற்கும், புலிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதுபற்றி ராஜீவ் பற்றி நான் எழுதிய புத்தகத்தில் ஏற்கனவேகுறிப்பிட்டுள்ளேன். அதுபற்றி ஒரு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அர்ஜூன் சிங்கிற்கும், சீக்கிய தீவிரவாத அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதற்கான ஆதாரங்களை இரண்டு வாரத்தில் வெளியிடுவேன்.
அர்ஜூன் சிங்கை காங்கிரசை விட்டு வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் சோனியா உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு காரணம்உள்ளது.
மத்திய பிரதேச அமைச்சரவையில் அர்ஜூன்சிங் அப்பா அமைச்சராக இருந்தார். அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு சிறையில் அடைத்தார் நேரு.சிறையிலேயே அவர் இறக்க நேரிட்டது. நேரு குடும்பத்துடன் ஏற்பட்ட பகையை தீர்க்க அர்ஜூன்சிங் திட்டம் போட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் புலி ஆதரவு இயக்கம். அதோடு காங்கிரசும், அதிகவும் தோழமை வைத்துக் கொண்டுள்ளன. தி.மு..க.வுடன்தோழமை வைத்துக் கொண்டு பிரபாகரனையும், பொட்டு அம்மனையும் கைது செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா சொல்வது வேடிக்கையானது.
ஐந்தாண்டுகள் முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்போது இதற்காக எதுவுமே முயற்சிக்கவில்லை என்பது ஊருக்கே தெரியும். நாடகம் போடுவதைஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தி.மு..க., அ.தி.மு.க வை விட்டு காங்கிரஸ் வர வேண்டும். தமிழ்நாட்டில் த.மா.கா தலைமையில் காங்கிரஸ், ஜனதா கட்சி, ஜனதா தளம், எம்ஜிஆர்அ.தி.மு.க போன்ற கட்சிகள் இணைந்து அணி அமைக்க வேண்டும் என்றார் சாமி.
இந்த அணியில் சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்த்துக் கொள்ளப்படுமா என்று செய்தியாளர்கள் கடைசியாக கேட்டபோது,கம்யூனிஸ்ட்டுகளுக்கு எங்கே ஓட்டு இருக்கிறது என்று கிண்டலடித்தார் சாமி.












Click it and Unblock the Notifications