தமிழகத்தில் இன்று
பெங்களூர் குண்டுவெடிப்பின் பின்னணியில் பெரும் சதி
பெங்களூர்:
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் சர்ச்களில் நடந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் பெரும் சதிச் செயல்கள்மறைந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மக்களிடையே கலவரத்தையும், மதவாதத்தையும் தூண்டும் வகையில் கர்நாடகத்தில்தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்றும், அவர்கள் தான் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடந்த குண்டுவெடிப்புச்சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் என்றும் கர்நாடக போலீசார் கூறுகின்றனர்.
ஹூப்ளி, குல்பர்கா, பெங்களூரில் சமீபத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப்பின்னணியில் இருக்கும் குற்றவாளிகளையும், மதவாதத்தைத் தூண்ட நினைக்கும் தீவிரவாதிகளையும்கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
இதற்காக 3 தனிப்போலீஸ் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில்கர்நாடகத்தில் வாழும் பல்வேறு மதத்தினரிடையே அமைதியைக் குலைக்கும் வகையிலும், பீதியை ஏற்படுத்தும்வகையிலும், தீவிரவாதிகள்தான் இக்குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது.
இதன்படி அவர்கள் முதலில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குண்டு வெடிக்கச் செய்தார்கள். இதனால் இதற்குஇந்துக்கள்தான் காரணம் என்று சந்தேகம் வரும். இதன் மூலம் இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மோதல்வரும். பிறகு அம்பேத்கர் சிலைகளுக்குக் குண்டுகள் வைத்துத் தகர்ப்பது. இதன் மூலம் இந்துக்களிடையே சாதிமோதல்களை உருவாக்குவது. இறுதியாக கோவில்கள், மசூதிகள் ஆகிய இடங்களில் குண்டு வைப்பது என்றுஅந்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகப் போலீசாருக்குத் ரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும்உயர்போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடக போலீஸ் அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே இதுகுறித்துக் கூறுகையில், குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப்பின்னணியில் உள்ளவர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு இருக்கும் என்றும்தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இன்னும் இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டங்கள்உறுதிப்படுத்தப்படவில்லை என்றார்.
இதற்கிடையே, பெங்களூர் மாகடி சாலை, மினர்வா மில் அருகே, வேன் ஒன்றில் வெடித்த குண்டுவெடிப்பில்காயமடைந்த இப்ராமிமை போலீஸார் கைது செய்துள்ளனர். குண்டுவெடித்த வேனில் இருந்து சிறுபான்மைக்கிறிஸ்தவர்களுக்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்களைப் போலீசார் கைப்பற்றினர்.
ஜெகஜீவன் ராம் நகர் செயின்ட்பால் சர்ச்சில் குண்டு வைத்து விட்டு, மீதமிருந்த குண்டுகளுடன் வந்துகொண்டிருந்தபோது குண்டுவெடித்து வேன் எரிந்தது. இதில் வேனிலிருந்த 2 பேர் இறந்தனர். வேனை ஓட்டி வந்தஇப்ராகிம் காயமடைந்தார்.
இச்சம்பவம் பற்றித் துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ 5 லட்சம் பரிசுத்தொகை அளிப்பதாகவும் போலீசார்அறிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications