தமிழகத்தில் இன்று
செளத்ரி விடுதலைக்கு இந்தியா வரவேற்பு
டெல்லி:
பிஜியில் பினைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த இந்திய வம்சாவளிப் பிரதமர்மகேந்திர பால் செளத்ரி விடுதலை செய்யப்பட்டதை இந்தியா வரவேற்றுள்ளது.
செளத்ரி விடுவிக்கப்பட்டது, பிஜியில் இயல்பு நிலை திரும்ப உதவும் என்றும் இந்தியாகூறியுள்ளது. இருப்பினும் விரைவில், 1997-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல்சட்டமும் அமல்படுத்த வேண்டும் என்றும் இந்தியா கருத்துத் தெரிவித்துள்ளது.
செளத்ரி விடுதலை தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்கூறுகையில், காமன்வெல்த் கொள்கைகளை பிஜி கடைப்பிடிக்கும் என்று நம்புகிறோம்.பிஜியில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையை இந்தியா உன்னிப்பாக கவனித்துவருகிறது.
விடுதலை செய்யப்பட்ட மகேந்திர செளத்ரியுடன், பிஜியில் உள்ள இந்தியத் தூதரகஅதிகாரிகள் பேச்சு நடத்துவார்கள். இது வழக்கமான ஒன்றுதான். வெளிநாடுகளில்உள்ள இந்தியத் தூதர்கள், அந்நாட்டின் முக்கியத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதில்ஆச்சரியம் இல்லை என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications