தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மகிழ்ச்சி வெள்ளத்தில் மகேந்திர செளத்ரியின் கிராமம்

பஹுஜமால்பூர் (ஹரியானா):

அப்பாடா...! இதுதான் பஹுஜமால்பூரில் உள்ள பிஜியின் முன்னாள் பிரதமர் மகேந்திரபால் செளத்ரியின் உறவினர்களின் வாய்கள் முணுமுணுக்கும் வார்த்தை.

வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, தூர்தர்ஷன் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்த அவர்கள், மகேந்திர பால் செளத்ரியும், அவருடன் பிணைக் கைதிகளாகபிடிக்கப்பட்டிருந்த 17 பேரும், புரட்சிக்காரர்களால் விடுவிக்கப்பட்ட செய்தியைக்கேட்டதும், துள்ளிக் குதித்தனர்.

56 நாட்களுக்குக்கு முன் தொலைத்த மகிழ்ச்சியை மீண்டும் பெற்றுள்ளனர்செளத்ரியின் உறவினர்கள். செளத்ரி, பிஜியின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர்என்பது குறிப்பிடத்தக்கது.

செளத்ரி விடுதலைச் செய்தி கிடைத்தவுடன், அவரது சகோதரர் காளிராமின் வீட்டில்அனைத்து உறவினர்களும் கூடினர். கிராமம் முழுவதும் அவர்கள் கிட்டத்தட்டஊர்வலமாகச் சென்று செளத்ரி விடுதலையை பகிர்ந்து கொண்டனர்.

இத்தனைக்கும் இவர்கள் யாரும் செளத்ரியை பார்த்தது இல்லை. டிவி.யில் மட்டுமேபார்த்துள்ளனர். இருப்பினும் தங்கள் மண், உறவினர் என்ற பந்தம் அவர்களை செளத்ரிபால் மிகுந்த பாசம் கொண்டவர்களாக மாற்றி விட்டது. செளத்ரி பிறந்தது, வளர்ந்ததுஎல்லாமே பிஜியில்தான்.

86 வயதாகும், காது கேட்காத பெரியவர் ராம் பிரசாத் கூட செளத்ரி குறித்து ஆர்வம்காட்டினார். கூட்டமாக கூடியிருந்த உறவினர்களிடம் என்னாச்சு?. செளத்ரி வெளியேவந்தாச்சா? என்று ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

காளிராம் கூறுகையில், செளத்ரி எங்கள் ரத்தம். கடந்த ஆண்டு பிரதமர் பதவியைஏற்றுக் கொண்டவுடன் எங்களுக்கு எழுதிய கடிதத்தில் கட்டாயம் ஒருமுறை ரோதக்வருவதாக கூறியிருந்தார் என்றார். அந்தக் கடிதத்தையும் அவர் பெருமையுடன்காட்டினார். இப்போது விடுதலையாகியுள்ள நிலையில் செளத்ரி ரோதக் வருவாராஎன்று எதிர்பார்ப்புடன் கேட்கிறார் காளிராம்.

காளிராம் தொடர்ந்து கூறுகையில், எனது பாட்டிதான், செளத்ரிக்கும் பாட்டி. அவர்1912-ல் பிஜிக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு பிஜி இனத்தைச் சேர்ந்தவரைக்கல்யாணம் செய்து கொண்டார். பிறகு 37 ஆண்டுகள் பிஜியில் வசித்த பிறகு இங்குதிரும்பினார். சாகும் வரை இங்கேயே இருந்தார்.

செளத்ரியின் பாட்டிக்கு ராம்கோபால், கிருஷ்ண கோபால் என்று இரு மகன்கள். ராம்கோபாலின் மகன்தான் செளத்ரி. ராம் கோபால் கடைசியாக 1962-ல் இந்தியாவந்திருந்தார். அதன் பிறகு யாரும் வரவில்லை என்றார் காளிராம்.

செளத்ரி பிரதமர் ஆனபோது, ஊரில் உள்ள அனைவருக்கும் இனிப்பு வழங்கி அவரதுஉறவினர்கள் கொண்டாடினர். இதை வீடியோவாக எடுத்து செளத்ரிக்கும் அனுப்பினர்.இப்போதும் அதே அளவிலான மகிழ்ச்சியுடன் அவர்கள் உள்ளனர். இன்னொருதீபாவளியாக இதை நினைத்துக் கொண்டாடினர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+