தமிழகத்தில் இன்று
என்ஜின் தீப்பிடித்ததால் விமான விபத்து
பாட்னா:
என்ஜின் பழுதடைந்து தீப்பிடித்துக் கொண்டதால்தான், பாட்னாவில் திங்கள்கிழமை காலை விபத்துக்குள்ளான விமானம் வெடித்துச் சிதறியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கல்கத்தாவிலிருந்து, டெல்லி செல்லும் அலயன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், பாட்னா விமான நிலையத்திற்கு திங்கள்கிழமை காலை வந்தது. அங்கிருந்து7.30மணிக்கு விமானம் டெல்லி கிளம்பியது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் வெடித்துச் சிதறி, தரையில் விழுந்தது.
வெடித்துச் சிதறிய விமானம், மாநில வீட்டு வசதி வாரியக் குடியிருப்பின் மீது விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 54 பேரும், கீழே இருந்த 6பேரும் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் சீரியசான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து அலயன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ஏ.கே.கோயல் கூறுகையில், 95 சதவீத விமானம் எரிந்து விட்டது. நிலைமை மிகவும்மோசமாக உள்ளது.
பாட்னா விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே ஒரு என்ஜின் பழுதுபட்டுள்ளது. பிறகு தீப்பற்றிக் கொண்டுள்ளது. இதையடுத்துவிமானம் வெடித்துச் சிதறியது என்றார்.
விசாரணைக்கு உத்தரவு:
இதற்கிடையே விமான விபத்து குறித்து விசாரணை நடத்த உயர் மட்டக் குவு அமைக்கப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்சரத் யாதவ் கூறியுள்ளார்.
விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார். அமைச்சருடன் உயர் அதிகாரிகளும் சென்றனர். மத்திய ரயில்வேஅமைச்சர் மமதா பானர்ஜி, ரயில்வே இணை அமைச்சர் திக் விஜய் சிங் ஆகியோரும் பாட்னா விரைந்துள்ளனர்.
விமான விபத்தில் இறந்தவர்களின் பட்டியல் விவரம்:
பாட்னாவைச் சேர்ந்த பயணிகள்: ஆர்ய ப்ரியா, பி.போப்பண்ணா, வி.பரத்வாஜ், எம். ஆனந்த். என்,ஆனந்த், எஸ்.டெய், எஸ்.தத்தா, ஜி.கண்வீர், எஸ்.குப்தா,எம்.குப்தா, ஆர்.குப்தா, டி.கோயல், ஆர் தத்தா, எஸ். ஜெயக்குமார், ஏ.கபூர், எஸ்.கிருஷ்ணம், பி.குமார், டி.ஜாங்டே, கே.மிஸ்ரா, எஸ்.மிஸ்ரா, ஆர். முகர்ஜி,கே.பதக், ஆர்.பிரசாத், கே.ராஜ்கார்கி, பி.ராஜ்கார்கி,கே.ராஜ்கார்கி, எஸ்.ராமச்சான், ஆர்.ரானா, எச்.ரதோர், ஜி.ராய், ஏ.ராய், பி.ரங்டா,பி.சட்டாபாத், பி.சக்சேனா, பி.சென், ஜெ.சிங், எல்.சிங், பி.சின்கா, ஆர்.ரஞ்சன், எஸ்.சஹா, பி.சஹா,ஆர்.ஸ்வாமி, பி.சஹாரியா, ஜி.சின்ஹல், கே.ஷர்மா மற்றும்எம்.ஏஷு.
ல்கனோவைச் சேர்ந்த பயணிகள்: ஏ.தீக்ஷித். டி.தத்தா, ஏ,குமார், பி,முகோபாத்யா, ஆர்.சிங் மற்றும் எஸ்.ரஹ்மான்
பைலட்கள்: கேப்டன் சோஹன் பால் (காமண்டர்) மற்றும் ஏ.எஸ்,பாகா (உதவி பைலட்)
விமான பணிப்பெண்கள்: எஸ்.குரானா, சப்னா, பி.மாவாய் மற்றும் புஷ்பா.
பீகார் ஆளுனர் வி.சி பாண்டே, பீகார் முதல்வர் ராப்ரி தேவி மற்று ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் விபத்து நடந்தஇடத்துக்கு மீட்புப் பணிகளை பார்வையிடுவதற்காக விரைந்துள்ளனர். ராணுவத்தினரும் மீட்புப் பணியில் உதவி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications