தமிழகத்தில் இன்று
பாட்னா இந்தியன் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் 61 பேர் பலி
பாட்னா:
பாட்னாவிலிருந்து டெல்லி கிளம்பிய அல்லயன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், பாட்னா விமான நிலையம் அருகே நொறுங்கி விழுந்து, வெடித்துச் சிதறியதில் 61பேர் இறந்தனர்.
திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு இந்த விபத்து நடந்தது. கல்கத்தாவிலிருந்து பாட்னா வந்த இந்த விமானம், அங்கிருந்து லக்னோ வழியாகடெல்லி செல்லவிருந்தது.
பாட்னா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சித்கோரா பாலம் அருகே விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்து நொறுங்கியஇடத்திலிருந்து பெரும் புகை மூட்டம் கிளம்பியது. மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
என்ஜின் பழுதடைந்து தீப்பிடித்துக் கொண்டதால், விமானம் வெடித்துச் சிதறியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வெடித்துச் சிதறிய விமானம், மாநில வீட்டு வசதி வாரியக் குடியிருப்பின் மீது விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 54 பேரும், கீழே இருந்த 6பேரும் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் சீரியசான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து அலயன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ஏ.கே.கோயல் கூறுகையில், 95 சதவீத விமானம் எரிந்து விட்டது. நிலைமை மிகவும்மோசமாக உள்ளது.
பாட்னா விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே ஒரு என்ஜின் பழுதுபட்டுள்ளது. பிறகு தீப்பற்றிக் கொண்டுள்ளது. இதையடுத்துவிமானம் வெடித்துச் சிதறியது என்றார்.
7 பேர் தப்பினர்:
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஏழு பயணிகள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
பி.ருங்க்தா, பி.போபண்ணா, ஆர்.ரானா, ஆர்.ரஞ்சன், கே.ராஜ்கரியா மற்றும் ஒரு பெண் உள்பட 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பாட்னாவைச் சேர்ந்தவர்கள்.
விமானம் வெடித்துச் சிதறி, கீழே விழுந்தபிறகு, இவர்கள் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். ஆபத்தான நிலையில் அனைவரும்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது நிலை குறித்து தெரிவிக்கப்படவில்லை. விமானத்தின் கதவுக்கு அருகே இவர்கள் அமர்ந்திருக்கலாம்என்று தெரிகிறது.
விமான விபத்து நடந்த இடம் முழுவதும் இறந்த பயணிகளின் உடல்கள் சிதறிக் கிடந்தன. பல உடல்கள் உருக்குலைந்து கிடந்தன.
விபத்து நடந்த இடத்திற்கு அருகேயுள்ள பல குடிசை வீடுகள் தீக்கிரையாகி விட்டன. அங்கு வசித்து வந்தவர்கள் நிலை குறித்துத் தெரியவில்லை. கிரேன்கள்மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள் மூலம் இங்கு சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. விபத்து குறித்து அறிய உதவும் கருப்புப் பெட்டிஇன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
விமான நிலைய ரன்வேயிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலேயே விபத்து நடந்துள்ளது
விசாரணைக்கு உத்தரவு:
இதற்கிடையே விமான விபத்து குறித்து விசாரணை நடத்த உயர் மட்டக் குவு அமைக்கப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்சரத் யாதவ் கூறியுள்ளார்.
விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார். அமைச்சருடன் உயர் அதிகாரிகளும் சென்றனர். மத்திய ரயில்வேஅமைச்சர் மமதா பானர்ஜி, ரயில்வே இணை அமைச்சர் திக் விஜய் சிங் ஆகியோரும் பாட்னா விரைந்துள்ளனர்.
விமான விபத்தில் இறந்தவர்களின் பட்டியல் விவரம்:
பாட்னாவைச் சேர்ந்த பயணிகள்: ஆர்ய ப்ரியா, பி.போப்பண்ணா, வி.பரத்வாஜ், எம். ஆனந்த். என்,ஆனந்த், எஸ்.டெய், எஸ்.தத்தா, ஜி.கண்வீர், எஸ்.குப்தா,எம்.குப்தா, ஆர்.குப்தா, டி.கோயல், ஆர் தத்தா, எஸ். ஜெயக்குமார், ஏ.கபூர், எஸ்.கிருஷ்ணம், பி.குமார், டி.ஜாங்டே, கே.மிஸ்ரா, எஸ்.மிஸ்ரா, ஆர். முகர்ஜி,கே.பதக், ஆர்.பிரசாத், கே.ராஜ்கார்கி, பி.ராஜ்கார்கி,கே.ராஜ்கார்கி, எஸ்.ராமச்சான், ஆர்.ரானா, எச்.ரதோர், ஜி.ராய், ஏ.ராய், பி.ரங்டா,பி.சட்டாபாத், பி.சக்சேனா, பி.சென், ஜெ.சிங், எல்.சிங், பி.சின்கா, ஆர்.ரஞ்சன், எஸ்.சஹா, பி.சஹா,ஆர்.ஸ்வாமி, பி.சஹாரியா, ஜி.சின்ஹல், கே.ஷர்மா மற்றும்எம்.ஏஷு.
ல்கனோவைச் சேர்ந்த பயணிகள்: ஏ.தீக்ஷித். டி.தத்தா, ஏ,குமார், பி,முகோபாத்யா, ஆர்.சிங் மற்றும் எஸ்.ரஹ்மான்
பைலட்கள்: கேப்டன் சோஹன் பால் (காமண்டர்) மற்றும் ஏ.எஸ்,பாகா (உதவி பைலட்)
விமான பணிப்பெண்கள்: எஸ்.குரானா, சப்னா, பி.மாவாய் மற்றும் புஷ்பா.
பீகார் ஆளுனர் வி.சி பாண்டே, பீகார் முதல்வர் ராப்ரி தேவி மற்று ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் விபத்து நடந்தஇடத்துக்கு மீட்புப் பணிகளை பார்வையிடுவதற்காக விரைந்துள்ளனர். ராணுவத்தினரும் மீட்புப் பணியில் உதவி வருகின்றனர்.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications