தமிழகத்தில் இன்று
சென்னை:
விருது வாங்க விடாமல் என்னை சினிமாவை விட்டு விரட்ட வேண்டும் என்று பலர் சதி செய்கிறார்கள் எனறு நடிகை ரோஜா கண்ணீர் மல்கபேட்டியளித்தார்.
1995 ம் ஆண்டு நடிகை ரோஜாவும், அவரது தம்பியும் திரைப்படம் எடுப்பதற்காக முகுந்த்சந்த் போத்ரா
என்பவரிடம் ரூ 20 லட்சம் கடனாக வாங்கினர். ஆனால் இவர்கள் படம் எடுக்காததால் வாங்கிய பணத்தைத் திருப்பிக்கொடுக்குமாறு முகுந்த் சந்த்கேட்டார். அப்போது ரோஜா அவருக்கு 6 லட்ச ரூபாய் கொடுத்து விட்டு மீதிப்பணத்திற்கு செக் கொடுத்தார். அந்தச் செக் வங்கியில் பணம் இல்லாமல்திரும்பி வந்து விட்டது.
இந்நிலையில் போத்ரா கடன்தொகையை வசூல் செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ரோஜாவின்சம்பளத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யும்படி ரோஜாவை வைத்துப் படம் எடுக்கும் படஅதிபர்களுக்கு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி, பட அதிபர்கள் ரோஜாவின் சம்பளத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்தனர். அப்படியும் முகுந்த் சந்த் போத்ராவுக்குக் கிடைக்கவேண்டிய முழு பணமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தமிழக அரசு ரோஜாவை சிறந்த நடிகையாகத் தேர்வு செய்து விருது வழங்கவுள்ளது. இந்த விருது 40 கிராம் எடையுள்ள தங்க மெடலாகும்.எனவே அந்த விருதை ஏலம் விட்டு கடன்தொகையை நீதிமன்றம் வசூலித்துத் தரவேண்டும் என்று மீண்டும் ரோஜாவுக்கு எதிராக வழக்குத்தொடர்ந்துள்ளார் போத்ரா.
ரோஜா கண்ணீர் பேட்டி:
என் மேல் வழக்குப் போட்டு எனக்கு மனஉளச்சலை ஏற்படுத்தினால் நான் சினிமாவை விட்டு ஓடி விடுவேன் அல்லது தற்கொலை செய்து கொள்வேன்என்று போத்ரா நினைக்கிறார்.
என் தைரியத்தைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. என் அப்பா-அம்மா கொடுத்த உயிரை அவருக்காக நான் ஏன் விட வேண்டும்?
நான் எந்தத் தப்பும் செய்யவில்லை. எனக்கும் அவருடைய குற்றச்சாட்டுக்கும் சம்பந்தம் இல்லை. எல்லாம் கடவுளுக்குத் தெரியும்.
எத்தனையோ பேர் கோடிக்கணக்கில் கடன் வாங்கி ஏமாற்றியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்கள்.அப்படியிருக்கும்போது தப்பே செய்யாத நான் மட்டும் எப்படி கஷ்டப்படுகிறேன் என்று தெரியவில்லை.
கடனை அடைப்பதற்காக நான் இதுவரை கல்யாணம் கூட செய்துகொள்ளவில்லை. என் வாழ்க்கையில் இவ்வளவு தியாகம் செய்த பின்னும் நான் ஏன்இப்படிக் கஷ்டப்படுகிறேன் என்று தெரியவில்லை.
முதலில் எனக்கு எய்ட்ஸ் என்று வதந்தி பரப்பினார்கள். அப்புறம் கார்த்திக்குடன் காதல், திருமணம் என்று வசந்தி பரப்பினார்கள். இந்த வதந்திகள்சலித்துப் போய்விட்டது. இதற்கெல்லாம் இனி பதிலே சொல்லக் கூடாது. போத்ரா எனக்கு மேலும், மேலும் மனஉளச்சலை ஏற்படுத்துகிறார்.
என் மீது அன்புள்ளம் கொண்ட ரசிகர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காக இதையெல்லாம் சொல்கிறேன்.
எனக்கும், செல்வகணபதிக்கும் எத்தனையோ கஷ்டங்களை கொடுத்து விட்டனர். 10 ஆண்டுகளாக அதையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்கும் எங்களையாராலும் பிரிக்க முடியாது என்றார் ரோஜா.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications