தமிழகத்தில் இன்று
பிஜியில் புதிய அரசுக்கு ஜார்ஜ் ஸ்பீட் எதிர்ப்பு - பதவியேற்பு ஒத்திவைப்பு
வெலிங்டன்:
புரட்சிப் படைத் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் எதிர்ப்பை அடுத்து பிஜியில் புதிய அரசுபதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டது.
பிஜியில் இந்திய வம்சாவளிப் பிரதமர் மகேந்திர சவுத்ரி தலைமையில் ஆட்சிநடைபெற்று வந்தது. கடந்த மே 19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் நாடாளுமன்றக்கட்டடத்துக்குள் நுழைந்த புரட்சிப் படையினர் பிரதமர் உள்பட பலரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர்.
அதன் பிறகு பிஜியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ராணுவத்தின் கையில் ஆட்சி வந்தது.புரட்சிப் படையினருடன் ராணுவம் பேச்சு வார்த்தை நடத்தியது.
பிஜியில் பிஜி நாட்டவர்களைக் கொண்ட புதிய இடைக்கால அரசு ஏற்படுத்தவேண்டும்என்று புரட்சிப் படையினர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி முன்னாள் அதிபர் ராதுஜோசபா ஐலாய்லோ தலைமையில் புதிய அரசு ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து கடைசியாகப் பிடித்து வைத்திருந்த பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட 18பேரையும் கடந்த வாரம் பிணைக் கைதிகள் விடுவித்தனர்.
ஐலாய்லோ தலைமையிலான அரசில் தனது ஆதரவாளர்கள் இடம் பெறவேண்டும்என்று கூறிய ஜார்ஜ் ஸ்பீட் 21 பேருடைய பெயர்களை அறிவித்தார்.
இந் நிலையில், ஐலாய்லோ செவ்வாய்க்கிழமை புதிய அதிபராகப் பதவியேற்றுக்கொண்டார். அவரது தலைமையிலான அரசு புதன்கிழமை பதவியேற்க இருந்தது.
ஆனால், புதன்கிழமை காலை நடைபெற இருந்த புதிய அரசு பதவியேற்புஒத்திவைக்கப்பட்டது. புதிய அரசுக்கு புரட்சிப் படைத் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட்எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து பதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டது.
ஐலாய்லோ தலைமையில் 22 கேபினட் அமைச்சர்கள் 12 உதவி அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் 21 பேர் தனது ஆதரவாளர்களாகஇருக்கவேண்டும் என்று ஜார்ஜ் ஸ்பீட் கூறியிருந்தார். ஆனால், 4 பேரை மட்டும் புதியஅரசில் ஐலாய்லோ சேர்த்துக் கொண்டார்.
இதையடுத்து தனது எதிர்ப்பை ஜார்ஜ் ஸ்பீட் தெரிவித்துள்ளார். பிரதமர் பதவிக்குஜார்ஜ் ஸ்பீட் பரிந்துரை செய்திருந்த ராது எபெலி கனாய்மாவிக்கு எந்தப் பதவியும்தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அரசில் தனது ஆதரவாளர்கள் அதிகம் பேர் சேர்த்துக் கொள்ளாததற்கு எதிர்ப்புத்தெரிவித்துள்ள ஜார்ஜ் ஸ்பீட் அரசுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். விரைவில்நாடு முழுவதும் தனது ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்றுஅவர் கூறியுள்ளார்.
இந் நிலையில், பிஜி நாட்டுக்கான தனது தூதர்களை ஆஸ்திரேலியா, நியுசிலாந்து,அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் விலக்கிக் கொண்டுவிட்டன.
பிஜியில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து இந் நடவடிக்கையை அந்நாடுகள் மேற்கொண்டுள்ளன.
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications