தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

7 மாதத்தில் 7 பெண் சிசுக் கொலைகள்...சேலத்தில் தொடரும் பயங்கரம்

சேலம்:

கம்யூட்டர், இன்டர்நெட் என விஞ்ஞான வளர்ச்சியில் இருபத்தோறாம் நூற்றாண்டில்உலகம் அதிவேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தமிழகத்தில் உள்ள சிலகிராமங்களில் இன்னும் பழைய கொடூரமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

பெண்களை மதிக்கவேண்டும் என்ற ரீதியில் உலகம் முழுவதும் ஒரு கருத்து ஏற்பட்டுபெண்களுக்கு என ஐக்கிய நாடுகள் சபையால் ஒரு நாள் உலகம் முழுவதும்கொண்டாடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தமிழகத்தில் இன்னமும் பெண்களுக்கு அவ்வளவு சுதந்திரம்கொடுக்கப்படவில்லை என்றாலும், பெண்களே தங்களுக்குப் பிறக்கும் பெண்குழந்தையைக் கொல்லும் பயங்கரம் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

வறுமை, வசதியின்மை ஆகியவற்றுக்கு நடுவே பெண் குழந்தை பிறந்தால் எப்படிகாப்பாற்றுவது என்று யோசித்து குழந்தையை கொன்று விடுவது என்கிற கொடூரமானமுடிவை பெண்களே எடுக்கின்றனர் என்பதுதான் மிகவும் கொடுமையானது.

தமிழகத்தில் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, சேலம் பகுதிகளில் இந்த கொடுமைகள் பலஆண்டுகளாகவே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பெண் சிசுக் கொலையைத்தடுக்க தமிழக அரசு பல திட்டங்களையும், தடுப்பு நடவடிக்கைகளையும்மேற்கொண்டுள்ள போதும், அதைத் தடுக்க முடியவில்லை.

பெண் குழந்தையைக் கொல்ல மேற்கொள்ளப்படும் முறை பயங்கரமானது.

பிறந்த குழந்தையின் வாயில் நெல்லைப்போட்டு விட்டு ஈரத் துணியால் முகத்தைகட்டிவிடுவார்கள். ஒரு சில நொடிகளில் குழந்தையின் மூச்சு அடங்கிவிடும். மற்றொருமுறை குழந்தையின் வாயில் கள்ளிப்பாலை ஊற்றிவிடுவது.

தற்பொழுது சேலம் பகுதியில் மேற்கொள்ளப்படும் முறை படு பயங்கரமானது.

கடந்த 17-ம் தேதி சேலத்தில் மாவட்டஆட்சித்தலைவர் தலைமையில் பெண் சிசுக்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் நடந்த அன்றே பெண்சிசு ஒன்று சேலம் புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள குப்பைத் தொட்டியில் கிடந்தது.

பிறந்து பத்து நாட்களே ஆன பெண் குழந்தையை, சேலம் அரசு மருத்துவமனைக்குசிகிச்சைக்காகக் கொண்டு வந்தனர் நாமக்கல்லைச் சேர்ந்த செல்லப்பன், பார்வதிதம்பதியினர்.

குழந்தையின் முதுகில் இருந்த கட்டிக்குச் சிகிச்சை பெறுவதற்காக அவர்கள் வந்தனர்.மருத்தவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை திடீரென்று காணவில்லை. குழந்தையின்பெற்றோரையும் காணவில்லை.

இந்த நிலையில் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் அப்பெண் குழந்தை கிடந்தது. குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

துப்புரவுப் பணியாளர்கள் பார்த்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.விசாரணையில் அக் குழந்தை நாமக்கல்லைச் சேர்ந்த செல்லப்பன், பார்வதி தம்பதியின்குழந்தை என்று தெரியவந்தது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அக் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் குழந்தை இறந்துவிட்டது. இதையடுத்து பெற்றோரைப் போலீஸார் தேடிவருகின்றனர். செல்லப்பன், பார்வதி இருவரும் கொடுத்திருந்த நாமக்கல் முகவரிபோலி என்று தெரியவந்தது.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஏழுமாதத்தில், இது ஏழாவது பெண் சிசுக் கொலைஎன்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+