தமிழகத்தில் இன்று
தமிழ் சின்னத் திரையில் கொடிகட்டிப் பறக்கும் இளம் நட்சத்திரம். மணியான இயக்குனரின் இயகத்தில், கதாநாயகிக்கு அக்காவாக நடித்தவர். நல்ல நடிகைதான்.
ஒரு படத்திற்குப் பிறகு தனக்கு அலையலையாக சினிமாபடவாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. சரி போங்கப்பாஎன்று சின்னத் திரையிலேயே மின்னிக் கொண்டிருக்கிறார்.
தற்பொழுது அவர் நகைச்சுவை பெயர் கொண்ட டைட்டிலில் வந்து கொண்டிருக்கும் சீரியலில் படு பிஸி. இந்த தொடரில் நடிகையின் காதலனாகவும்,கதாநாயகனாகவும் நடிக்கும், இளம் நடிகரின் மீது நட்பு அதிகமாகி அது காதலாகிவிட்டது என்கிறார்கள் சின்னத்திரை உலகில்.
பதினாறு வயதினிலே.. அடுத்து காதல் ஒவியம்..
அப்பா பாரதிராஜாவின் முதல் படமான "பதினாறு வயதினிலே" தலைப்பையே தன் முதல் இசை ஆல்பத்திற்கு பெயராக வைத்து, அதில் மீனாவையும்பாட வைத்தார் மனோஜ்குமார்.
இவரது அடுத்த இசை ஆல்பத்திற்கு "காதல் ஒவியம்" என்று பெயர் வைத்திருக்கிறார். எந்த நடிகையை பாடவைப்பது என்பது மட்டும் இன்னும்முடிவாகவில்லை.
தங்க கொலுசு நடிகைகள்...
நடிகைகளில், மீனா, தேவயானி, ஊர்வசி, குஷ்பூ, ஆகியோர் காலில் தங்கக் கொலுசு போட்டுக்கொள்கிறார்கள்.
நடிக்க வருகிறார் "மீசை" தேவாரம்
சுஜாதா, பிரபல வாரப்பத்திரிகையில் எழுதிய "பூக்குட்டி" என்ற தொடர்கதை "நிலாக் காலம்" என்கிற பெயரில் படமாகப் போகிறது.
ரோஜாதான் கதாநாயகி.இவர் இந்தக் கதையில் ஒரு நடிகை கதாபாத்திரத்திலேயே நடிக்கிறார். முன்னாள் தமிழக டி.ஜி.பி. தேவாரமும் இந்தப் படத்தில்நடிக்கிறார்.என்ன வேஷம் தெரியுமா?. காவல்துறை அதிகாரியாகவே தான்.
டைரக்டர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த காந்தி கிருஷ்ணாதான் இந்த படத்தை இயக்குகிறார்.ஏற்கனவே அரவிந்த்சாமி, மாதுரி தீட்சித் நடிக்க"இன்ஜினியர்" என்ற படத்தை இயக்கி வந்தார். படம் எண்பது சதவீதம் முடிந்து அதற்கு மேல் தொடரமுடியாமல் பல பிரச்சனைகளில் சிக்கிக்கிடக்கிறது.
"நிலாக் காலம்" தான் காந்தி கிருஷ்ணாவுக்கு நல்ல காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications