தமிழகத்தில் இன்று
தியேட்டர்களில் மாத்ருபூதத்தின் "செக்ஸ் கல்விப் படம்"
சென்னை:
டாக்டர் மாத்ருபூதம் இயக்கியுள்ள "புதிரா? புனிதமா?" என்ற செக்ஸ் கல்விப் படம் வெள்ளிக்கிழமை முதல்தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.
சென்சார் போர்டு உறுப்பினர்களின் உத்தரவுக்கு ஏற்ப சுமார் 18 இடங்களில் காட்சிகள் வெட்டப்பட்டு இப்படம்திரையிடப்படுகிறது.
டாக்டர் மாத்ருபூதமும், மருத்துவக் கல்லூரி மாணவி ஷர்மிளா இருவரும் பங்கு கொண்ட "புதிரா?, புனிதமா?"என்ற தொடர் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் ஒளிபரப்பானது. இதற்குமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
இதையடுத்து அந்த நிகழ்ச்சியை டாக்டர் மாத்ருபூதம் சினிமா படமாகத் தயாரித்துள்ளார். நிழல்கள் ரவி,எஸ்.எஸ்.சந்திரன், விநோதினி, லலிதா, வாசு உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியது மட்டுமல்லாமல் இப் படத்தை டாக்டர் மாத்ருபூதமேஇயக்கியுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்சாருக்கு அனுப்பப்பட்ட இப்படத்தை சென்சார் போர்டு அதிகாரிகள்பார்த்தனர். அப் படத்தில் 18 இடங்களில் வெட்டவேண்டும் என்று அவர்கள் கூறினர்.
ஆனால், படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும், இதுசெக்ஸ் கல்வியை அளிக்கும் படம். ஆகவே, படத்தில் காட்சிகளை வெட்டினால் படத்தின் தன்மை கெட்டுவிடும்என்று மாத்ருபூதம் கூறினார்.
இருப்பினும் சென்சார் போர்டு அதிகாரிகள் கடுமையுடன் நடந்து கொண்டதால் இப்போது 18 இடங்களில்வெட்டப்பட்டு இப் படம் வெளியிடப்படுகிறது.
இப் படம் பற்றி மாத்ருபூதம் கூறியதாவது:
இத் திரைப்படத்தில் தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பது, நண்பர்களுடன் பழகும் எல்லை,குழந்தைகளை முறையாக வளர்க்காவிட்டால் ஏற்படும் பாதிப்பு, நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்றுஆகிவிட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி நான்கு கதைகள் சொல்லப்பட்டுள்ளன.
இப்படத்தில் நான் டாக்டராகவே நடித்துள்ளேன். பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்குரிய பல ஆலோசனைகளைக்கூறியுள்ளேன்.
படத்தைப் பார்த்த அதிகாரிகள் இப்படத்தில் பல இடங்களில் வெட்ட வேண்டும் என்று கூறினார்கள். படத்தில்வரும் காட்சிகள் செக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் என்றாலும் அவைப் பார்ப்பவர்களுக்கு எந்த பாதிப்பையும்ஏற்படுத்தாத வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
இருந்தும் சென்சார் போர்டு பல இடங்களில் பல காட்சிகளை வெட்டியுள்ளனர். தற்போது பல தடைகளைத் தாண்டிபடம் வெளியிடப்படுகிறது என்றார் மாத்ருபூதம்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications