தமிழகத்தில் இன்று
திங்கள்கிழமை துவங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்
டெல்லி:
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை துவங்குகிறது.
சுமார் ஒரு மாதம் நடைபெற்ற இக் கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சினைகள் குறித்துஆளுங் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காரசாரமாக விவாதித்துதீர்வு காண உள்ளனர்.
மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்ஏற்பட்டுள்ள சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை, டெல்லி, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும்நாட்டின் பிற பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறை உள்ளிட்ட அனைத்து விஷயங்கள்குறித்தும் இக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்படவுள்ளது.
குறிப்பாக, ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சுயாட்சித்தீர்மானம் குறித்து கடுமையான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை கடுமையாக எதிர்த்துப்பேச இடதுசாரிகட்சி உள்பட மற்ற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
கூட்டத்தின் முதல் நாளன்று, சமீபத்தில் கார் விபத்தில் இறந்த முன்னாள் மத்தியஅமைச்சர் ராஜேஷ் பைலட்டின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம்ஒத்திவைக்கப்படும்.
செவ்வாய்க்கிழமை முதல் வழக்கமான அலுவல்கள் மேற்கொள்ளப்படும்.
2000-2001-ம் ஆண்டின் பொது பட்ஜெட்டுக்கான துணை நிலை நிதி ஒதுக்கீட்டுமசோதா, 1997-98-ம் ஆண்டுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீட்டு மசோதா, 2000-2001-ம்ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டுக்கு துணை நிலை நிதி ஒதுக்கீட்டு மசோதா தாக்கல்மற்றும் விவாதம், ரயில்வேக்கு 1997-98-ம் ஆண்டுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீட்டுமசோதா உள்ளிட்ட பணிகள் இக் கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்படும்.
புதிதாக ஜார்க்கண்ட், உத்தராகண்ட், வனாஞ்சல், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களைஏற்படுத்துவது தொடர்பான மசோதாவும், மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுக்குநிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக 11-வது நிதி கமிஷன் அறிக்கையும் விவாதத்துக்குஎடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
இது தவிர நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ள பிற மசோதாக்களும் இந்தகூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications