தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

"இலங்கை அரசு ஊழியர்களின் சம்பளம் உயருகிறது"

கொழும்பு:

அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக புதிய சம்பள விகிதம் குறித்து பரிந்துரை செய்ய புதிய கமிஷன்நியமிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்துவருகிறது. இதையடுத்து ஏற்பட்ட கூடுதல் செலவைச் சரிகட்ட வரிகளை இலங்கை அரசுஉயர்த்தியது.

வரி உயர்வால் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்தன.இதையடுத்து அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவேண்டும் என்றுதொழிற்சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.

இக் கோரிக்கையை அடுத்து அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த இலங்கை அரசுமுடிவு செய்துள்ளது. அதற்காக புதிய சம்பளம் விகிதம் பற்றி பரிந்துரைக்கவும், புதியகொள்கைகளை அறிவிக்கவும் தனி கமிஷனை இலங்கை அரசு நியமித்துள்ளது.

9 பேர் கொண்ட இக் கமிஷன், அரசு ஊழியர்களின் செயல் திறனை மேலும்அதிகரிப்பது குறித்தும் ஆராயும். இது தவிர, தனது பரிந்துரைகளை அமல்படுத்ததேவைப்படும் குறைந்தபட்ச நிதி ஆதாரம் பற்றியும் இக் கமிஷன் ஆராய்ந்துஅரசுக்குப் பரிந்துரை செய்யும்.

இலங்கையைப் போல் வாழ்க்கைத் தரமுள்ள பிற நாடுகளிலும், அண்டை நாடுகளிலும்உள்ள அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் விகிதம் பற்றியும் இக் கமிஷன்பரிசீலிக்கும்.

மேலும், இன்சூரன்ஸ் மற்றும் சமூக நலத்துறை உள்ளிட்ட சில துறை ஊழியர்களின்நலனைக் கருத்தில் கொண்டு அரசு விடுமுறை நாட்களை அதிகரிப்பது குறித்தும் இக்கமிஷன் அரசுக்கு பரிந்துரை செய்யும்.

எவ்வளவு காலத்துக்குள் இக் கமிஷன் தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் என்பதைஅரசு தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, இலங்கை அரசுக்கும் அந் நாட்டுக்கு நிதியுதவி அளிக்கும் சர்வதேச நிதிநிறுவனங்களுக்கும் இடையே மே மாதம் நடைபெற வேண்டிய கூட்டம் டிசம்பரில்நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இக் கூட்டம்நடைபெறும் என்று இலங்கையின் துணை நிதி அமைச்சர் காமினி பேரிஸ் கூறியதாகஅந் நாட்டுப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடுமையான சண்டைதுவங்கியதை அடுத்து மே மாதம் நடைபெற வேண்டிய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+