தமிழகத்தில் இன்று
வைகோ சென்ற விமானத்தை உரசிப் பார்த்த பறவை
திருச்சி:
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்ற விமானத்தின் மீது பறவை மோதியதில் விமானத்தின் இறக்கைப் பகுதி சேதமடைந்தது.
சார்ஜாவிலிருந்து சென்னை வரும் விமானம் சனிக்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தது. திருச்சி விமானநிலையத்தில் ம.தி.மு.கபொதுச்செயலாளர் வைகோ, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீசன் உள்பட 9 பேர் அந்த விமானத்தில் ஏறினர். பின்னர் காலை 4.40மணிக்கு விமானம் சென்னைக்குப் புறப்பட்டது.
ஓடுபாதையில் கிளம்பியபோது அங்கிருந்த பறவை ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த விமானத்தின் மீது மோதியது. இதனால் சப்தம் கேட்டது.இதையடுத்து விமானி விமானத்தை நிறுத்தினார். உயர்அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொழில்நுட்ப நிபுணர்கள், விமானநிலைய உயர்அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். அப்போது விமானத்தின்மீது பறவை மோதியதால்தான் விமானத்தில்சத்தம் கேட்டது தெரிய வந்தது.
பின்னர், விமானத்தில் பயணம் செய்த 30 பயணிகளும் இறக்கி விடப்பட்டு மாற்று விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications