தமிழகத்தில் இன்று
கருணாநிதியின் "இரட்டை வேடத்தைக்" கலைக்க அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை:
காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதியின் இரட்டை வேடத்தைக் கலைக்க ஜூலை 31-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தலைநகரங்களிலும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தமிழகம் தனது உரிமையை நிலைநாட்ட முதல்வர் கருணாநிதி தவறிவிட்டார். இதை மறைக்க தமிழக மக்களுக்கு தவறானசெய்திகளை அவர் தெரிவித்து வருகிறார்.
தமிழகத்துக்கு 19 டி.எம்.சி. தண்ணீர் விட கர்நாடகம் ஒப்புக் கொண்டுள்ளதாக நிருபர்களிடம் ஜூலை 16-ம் தேதி தெரிவித்தார். ஆனால், 6 டி.எம்.சி. தண்ணீர்மட்டுமே தர சம்மதித்ததாக கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.
இதையடுத்து, கர்நாடகம் 19 டி.எம்.சி. தண்ணீர் விட சம்மதித்தது ஜூன் மற்றும் ஜூலை 13-ம் தேதி வரையுள்ள காலகட்டத்துக்கு என்று பிறகு விளக்கம்அளித்துள்ளார்.
கருணாநிதியின் இந்த மறுப்பு விளக்கம் தமிழக மக்களை குறிப்பாக காவிரி டெல்டா பகுதி விவசாயிகளை ஏமாற்றுவது போல் ஆகும். கருணாநிதியின் இந்தஇரட்டை வேடத்தை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களும் ஜூலை 31-ம் தேதி ஆர்ப்பாட்டம்நடத்தப்படும்.
காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவுப்படி தமிழகத்துக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து கேட்டுப் பெற முதல்வர்நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் ஜெயலலிதா.
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications