தமிழகத்தில் இன்று
அமைதி திரும்புமா...ஆதங்கத்தில் பிஜி மக்கள்
சுவா:
கடுமையான அரசியல் நெருக்கடியில் பிஜி உள்ளது. நாட்டில் இன்னும் புதிய அரசு அமைக்கப்படாத நிலையில் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்திலும்,வெறுப்பிலும் தங்களது விடுமுறையைக் கூட அனுபவிக்க முடியாமல் உள்ள பிஜி மக்கள்.
புரட்சியின் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் மகேந்திர சவுத்ரியின் ஆட்சியைக் கவிழ்த்த பிஜி தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட், தனது கோரிக்கைகள்குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதே நேரத்தில் புரட்சியால் பதவியை இழந்த மகேந்திர சவுத்ரி வெளிநாடுகளின் உதவியுடன் பிஜிக்கு வெளியே அரசு அமைப்பது குறித்து தனது ஆதரவாளர்கள்பேச்சு நடத்தி வருகிறார்.
இதற்கிடையே புரட்சிக்குப் பிறகு ஆட்சி செய்து வரும் ராணுவமும், அதிபராக நியமிக்கப்பட்ட ஐலாய்லோவும் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில்உள்ளனர்.
இந்த மூன்று சம்பவங்களுக்கு இடையில் "சிக்கித் தவிக்கின்றனர்" பிஜி மக்கள். நாட்டில் புதிய ஆட்சி அமையும், மீண்டும் அமைதி திரும்புமா, தங்களுக்குநல்லகாலம் பிறக்குமா என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.
புரட்சியின் மூலம் மகேந்திர சவுத்ரியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஜார்ஜ் ஸ்பீட் தனது பல கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டார். ஆனால், புதியஅமைச்சரவையில் தனது ஆதரவாளர்களுக்கு அதிக இடம் கொடுக்காததை அவர் எதிர்த்து வருகிறார்.
இதனால், புதிய அதிபரால் அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவை இன்னும் பதவி ஏற்கப்படாமல் உள்ளது. இந் நிலையில் அடிசமானுனா ககோபாவ்என்ற பெண்ணை பிரதமராக நியமிக்கவேண்டும் என்று புதிய கோரிக்கையை ஜார்ஜ் ஸ்பீட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகவும் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் உயர்மட்ட பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என்று ஜார்ஜ் ஸ்பீட் கூறியுள்ளார்.
இதற்கிடையே, பதவியை இழந்த மகேந்திர சவுத்ரி தனது தலைமையில் புதிய அரசு அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பிஜிக்கு வெளியேஒரு ஆட்சி அமைக்க வெளிநாடுகளின் உதவியைக் கோர அவர் முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் விடி லோவு தீவில் அவர் பேச்சு நடத்தி வருகிறார். புதிய அரசு தொடர்பாக கொள்கை அளவில் முடிவுசெய்துள்ளோம். ஆனால் அது எப்போது, எங்கு என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறினர்.
இந் நிலையில் பிஜியில் உள்ள தொழிற்சங்கங்கள் எல்லாம் புரட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளன. புரட்சியால் அரசியல்மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பிஜி, மேலும் பல பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளது.
ஏற்கெனவே பிஜியுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள ஆஸ்திரேலியா, புதிய அரசில் புரட்சிப் படையினருக்குகூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டாலோ அல்லது ஜனநாயக முறையில் புதிய ஆட்சி அமையாமல் இருந்தாலோ மேலும் பொருளாதாரத் தடைகள்விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications