தமிழகத்தில் இன்று
ரூபாய்க்கு நேரம் சரியில்லை
டெல்லி:
இந்திய ரூபாயின் வாங்கும் மதிப்பு கடந்த மூன்று ஆண்டுகளாகக் குறைந்து வருவதாக மத்திய நிதித் துறை இணை அமைச்சர் தனஞ்செய குமார் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்து மூலம் அளித்த பதில்:
கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்திய ரூபாயின் வாங்கும் மதிப்பு குறைந்து வருகிறது. நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாத நிலவரப்படி இந்திய ரூபாயின் வாங்கும்மதிப்பு 22.83 பைசாவாகும்.
1998-ல் இது 26.11 பைசாவாகவும், 1999-ல் 24.10 பைசாவாகவும், இப்போது 22.83 பைசாவாகவும் உள்ளது. அதே போல் பெருநகரங்களில் இந்திய ரூபாயின் வாங்கும் மதிப்பும் வெவ்வேறு வகையில் உள்ளது.
டெல்லியில் 19.34 பைசாவாகவும், மும்பையில் 19.96 பைசாவாகவும், சென்னையில் 21.14 பைசாவாகவும், கல்கத்தாவில் 23.04 பைசாவாகவும்,பெங்களூரில் 23.70 பைசாவாகவும் உள்ளது.
தற்போது மத்திய அரசிடமுள்ள வெளிநாட்டு கரன்சியின் கையிருப்பு நடப்பு ஆண்டில் ஜூன் மாதக் கணக்குப்படி ரூ.162 கோடியாக உள்ளது. இதுவும் நடப்பு ஆண்டில்ஏப்ரல் மாதத்திலிருந்து குறைந்து கொண்டே வருகிறது.
விரைவில் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும்.
கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் போலியாக தயாரிக்க முடியாத வகையிலும் இந்த நோட்டுகள் தயாரிக்கப்படும் என்றார் தனஞ்செய குமார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications