தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

பால் தாக்கரே கைது

மும்பை:

இந்தியாவையே பரபரப்பூட்டிய சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே கைது செய்யப்பட்டார்.

மத்திய மும்பையில் உள்ள போய்வாடா நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால், அவராகவே நீதிமன்றத்துக்குச் சென்றதாகவும்போலீஸார் கைது செய்யவில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1992-93-ம் ஆண்டில் மும்பையில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரிய கலவரமாக மாறியது. இதில்நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

அப்போது தனது பத்திரிக்கையில் இந்த கலவரம் குறித்து தலையங்கம் எழுதினார் பால் தாக்கரே. இது பற்றி விசாரணை நடத்திய ஸ்ரீகிருஷ்ணா விசாரணைக்கமிஷன், பால் தாக்கரேயின் தலையங்கம் வன்முறையை மேலும் தூண்டும் வகையில் உள்ளது. ஆகவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றுமகாராஷ்டிர அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

அந்த அறிக்கை மீது இப்போதைய மகாராஷ்டிர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பால் தாக்கரே மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது.ஆனால், அவர் கைது செய்யப்படுவாரா? இல்லையா? என்பதை மகாராஷ்டிரா அரசு உறுதியாக அறிவிக்கவில்லை.

இதனால் கடந்த ஒரு வாரமாக நீருபூத்த நெருப்பு போல் இருந்த இப் பிரச்சினையில் உடனே நடவடிக்கை எடுக்கும்படி போலீஸுக்கு மகாராஷ்டிர அரசுதிங்கள்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து பால் தாக்கரே எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்தது.

இதனால், சிவ சேனைத் தொண்டர்களிடையே பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மும்பை,மாதோஷிரியில் உள்ள பால் தாக்கரே வீட்டுக்கு எதிரே ஏராளமான சிவ சேனைத் தொண்டர்கள் கூடி அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிவந்தனர்.

செவ்வாய்க்கிழமை காலை பால் தாக்கரே வீட்டுக்கு 100-க்கும் அதிகமான போலீஸார் சென்றனர். அப்போது அங்கு கூடியிருந்த சிவசேனைத்தொண்டர்கள் போலீஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

வீட்டுக்குள் சென்ற போலீஸார் சிறிது நேரத்தில் பால் தாக்கரேயுடன் வெளியே வந்தனர். தங்கள் தலைவரைப் போலீஸார் கைது செய்துவிட்டதாகக் கருதிசிவசேனைத் தொண்டர்கள் போலீஸாரைத் தடுத்தனர். இருப்பினும் பலத்த பாதுகாப்புடன் தாங்கள் கொண்டு வந்த வேனில் பால் தாக்கரேயை ஏற்றிநீதிமன்றத்துக்குப் போலீஸார் அழைத்துச் சென்றனர்.

வழக்கை சந்திப்பேன் - தாக்கரே

ஆனால், தனது வீட்டுக்குப் போலீஸார் வருவதற்கு முன் நிருபர்களிடம் பால் தாக்கரே பேசுகையில் தன்னைக் கைது செய்வது தொடர்பாகபோலீஸாரிடமிருந்தோ, நீதிமன்றத்திலிருந்தோ எந்த தகவலும் வரவில்லை என்றார்.

போலீஸார் வந்து என்னை அழைத்துச் சென்றாலோ அல்லது அழைத்துச் செல்லவில்லை என்றாலோ, என் மீதான வழக்கைச் சந்திப்பது எனது கடமை.போலீஸார்-மகாராஷ்டிர அரசின் கைது நாடகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலையை போக்கவேண்டும்என்று விரும்புகிறேன்.

எனக்கு எதிரான வழக்கைச் சந்திக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். இவ் வழக்கில் எனக்கு ஜாமீன் கிடைத்தால் நன்றாக இருக்கும்என்றார் பால் தாக்கரே.

அவரது அலுவலக அதிகாரிகளும், பால் தாக்கரேயை போலீஸார் கைது செய்து அழைத்துச் செல்லவில்லை. அவராகவே நீதிமன்றத்துக்குச்சென்றுள்ளார் என்று கூறியுள்ளனர்.

பால் தாக்கரேயை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றது அவரை கைது செய்தா அல்லது அவராகவே விரும்பி வந்தாரா என்பது குறித்து கருத்துதெரிவிக்க போலீஸ் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

பால் தாக்கரேயுடன் அவரது வழக்கறிஞர் சதிஷ் மனேஷின்டே, மகாராஷ்டிர சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் நாராயண் ரானே, பாஜகதலைவர்கள் கோபிநாத் முன்டே, சுரேஷ் பிரபு, சிவசேனை செய்தித் தொடர்பாளர் சுபாஷ் தேசாய் ஆகியோரும் நீதிமன்றத்துக்கு சென்றனர்.

இச் சம்பவத்தை அடுத்து மும்பை மாநகரம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடைகள் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது. மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+