தமிழகத்தில் இன்று
இடமாற்றத்தை எதிர்பார்த்து மாமியார் வீட்டுக்குச் சென்ற மாணவர்
அகமதாபாத்:
படித்துக்கொண்டிருந்த பல்கலைக்கழகத்திலிருந்து வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற்றல் தராததால் மனமுடைந்த பிஎட் மாணவர் ஜனாதிபதியின்உதவியாளர் எழுவதுபோல் போலிக் கடிதம் எழுதி கைதானார்.
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் போர்சாத் பல்கலைக் கழகத்தில் பிஎட் படித்து வரும் மாணவர் கமலேஷ் மகாவீர். இவர் தனக்கு அகமதாபாத்பல்கலைக்கழகத்திற்கு மாற்றல் தர வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தாரிடம் கேட்டுக்கொண்டார்.
ஆனால் பல்கலைக்கழக விதிமுறைகள் படி மாற்றல் கொடுக்க முடியாது என்று பல்கலைக்கழக நிர்வாகத்தார் மறுப்புத் தெரிவித்தனர். இதனால்,அம்மாணவர் குஜராத் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக் குழுவிற்கு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனின் உதவியாளர் எழுதுவது போல் கடிதம்எழுதினார்.
போலி லெட்டர்ஹெட் தயாரித்தார். அதில், மகாவீர் எனது உதவியாளர். போர்சாத் பல்கலைக்கழகத்தில் பிஎட் படித்து வருகிறார். அவரது தந்தைஉடல்நிலைசரியில்லாமல் அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மகாவீர் அவருடன் தங்கியிருக்க வேண்டியிருப்பதால், அவருக்குஅகமதாபாத்திற்கு மாற்றல் உத்தரவு தர வேண்டும்.
இடமாற்றம் குறித்த தகவல்களை மகாவீர் முகவரிக்கே அனுப்பி விடுங்கள். ராஷ்டிரபதி பவனுக்கு அனுப்பவேண்டாம் என்றும் எழுதியிருந்தார்.
கடிதத்தைப் பெற்ற பல்கலைக்கழக பிஎட் பிரிவுக்கு சந்தேகம் வந்தது. கடிதம் டெல்லியிலிருந்து அனுப்பப்படவில்லை. மாறாக குஜராத்திலுள்ள நவ்சாரிதபால் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டிருந்தது. மேலும் எதிர்காலத் தகவல்களை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்ப வேண்டாம் என்றுகூறியிருந்தது சந்தேகத்தை வலுப்படுத்தியது.
இதையடுத்துப் பல்கலைக்கழக நிர்வாகம் மகாவீருக்கு, இடமாற்றம் தரத்தயார். ஆனால் மகாவீர் நேரில் வந்து இதுகுறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்று கடிதம் அனுப்பியது. மாற்றலை எதிர்பார்த்து விரைந்து வந்தார் மகாவீர். அதே வேகத்தில் மாமியார் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications