தமிழகத்தில் இன்று
ஆட்சியில் பங்கு கேட்கிறது காங்கிரஸ்
சென்னை:
அ.தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்கும். ஆனால் கூட்டணி ஆட்சிதான் அமைக்க வேண்டும். அதில் பங்கும் தர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதலைவர் இளங்கோவன் கூறினார்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன்ஆலோசனை நடத்திவிட்டு சென்னை திரும்பிய அவர் நிருபர்களுக்கு அளித்தபேட்டி:
அ.தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்கும். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து காங்கிரஸ் போட்டியிடும். கூட்டணி ஆட்சிஏற்படும் வாய்ப்பு இருந்தால், ஆட்சியில் நிச்சயம் பங்கு கேட்போம்.
கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள்.அதை நிறைவேற்ற தலைவர் என்ற முறையில் நான் பாடுபடுவேன்.
அ.தி.மு.க. கூட்டணியில் எத்தனை சீட் கேட்போம் என்று இப்போதைக்கு தெரிவிக்க முடியாது. ஏனெனில் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள்உள்ளன. தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்ட பிறகு இட ஒதுக்கீடு பற்றி பேசி முடிவு செய்வோம்.
தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்றுதான்
தொண்டர்களும், நானும் விரும்புகிறோம். இது பற்றியும் தேர்தலில் தனித்து நிற்பது பற்றியும் காங்கிரஸ் தலைமையிடம்தான் முடிவு செய்யவேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உள்ள பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சிதிராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளைத் தடைசெய்யவேண்டும் என்றுகாங்கிரஸ் கோரி வருகிறது.அப்படி இருக்கும்போது அ.தி.மு.க கூட்டணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி வந்தால் அது பற்றி தேர்தல்நேரத்தில் ஆலோசிக்கப்படும்.
டெல்லியில் த.மா.கா. தலைவர் மூப்பனாரைச் சந்தித்துப் பேசினேன். 3-வது அணி பற்றி எந்த கருத்தையும் அவர் என்னிடம் தெரிவிக்கவில்லை.சுப்பிரமணியம் சுவாமிதான் 3-வது அணி பற்றி பேசி வருகிறார். ஆனால், அது உருப்படுவதாகத் தெரியவில்லை.
என்னைப் பொறுத்தவரை தமிழகத்தில் 3-வது அணி அமைவதற்கான
சாத்தியக்கூறு இருப்பதாகத் தெரியவில்லை என்றார் இளங்கோவன்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications