தமிழகத்தில் இன்று
4 பவுன் நகைக்காக 13 வயது சிறுமி கற்பழித்துக் கொலை
நெய்வேலி:
நெய்வேலி நிலக்கரிச் சுரங்க அதிகாரியின் மகள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். வீட்டில் இருந்த 4 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் வசிப்பவர் உத்திராபதி (43). இவர் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் இளநிலைப் பொறியாளராக வேலை செய்துவருகிறார். இவரது மகள் கவிதா (13). நெய்வேலியில் குளூனி பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார்.
உத்திராபதியின் மனைவி நீலாவதிக்கு உடல்நிலை சரியில்லாததால் மாதம் ஒரு முறை தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைஎடுத்து வருகிறார்.
கவிதாவுக்குக் கடந்த 24ம் தேதி என்எல்சி மருத்துவமனையில் டான்சில் அறுவை சிகிச்சை நடந்தது. கடந்த 26 ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்துடிஸ்ஜார்ஜ் ஆகினார். இதனால் கவிதா சனிக்கிழமை பள்ளிக்குச் செல்லவில்லை.
சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் உத்திராபதியும், அவரது மனைவி நீலாவதியும் சிகிச்சைக்காக தஞ்சாவூருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
மருத்துவமனைக்குச் சென்ற கவிதாவின் தாய், பக்கத்து வீட்டு நண்பர் அண்ணாதுரை என்பவர் வீட்டில் கவிதாவைக் கவனித்துக் கொள்ளும்படி கூறிவிட்டுச்சென்றார். கவிதா தனது தங்கை காயத்திரியையும், தம்பி பாலமுருகனையும் 8 மணியளவில் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
பின்பு பிற்பகல் 1 மணியளவில் அண்ணாதுரையின் மனைவி அமுதா, கவிதாவுக்கு சாப்பாடு கொண்டு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவுதிறந்திருந்தது. வீட்டில் டி.வி ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் கவிதாவைக் காணவில்லை. கவிதாவை ஒவ்வொரு அறையாகத் தேடிய அமுதா, இறுதியில்படுக்கையறையில் கவிதா அலங்கோலமாக, பேச்சுமூச்சின்றிக் கிடந்ததைப் பார்த்தார்.
உடலில் காயங்கள் கிடந்தன. கவிதாவை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கவிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவேஇறந்து விட்டதாக அறிவித்தனர்.
கவிதாவின் கழுத்துப் பகுதியில் கீறல்களும், இடது காலில் ரத்தம் கட்டியும் இருந்தது. அதோடு கவிதா காதில் அணிந்திருந்த தங்கத்தோடும், வீட்டில்பீரோவில் இருந்த 4 பவுன் எடையுள்ள நகைகளும் திருடு போயுள்ளன என்பதும் தெரிய வந்தது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications