வீரப்பனை நெருங்கி விட்டார் கோபால் : கர்நாடக முதல்வர்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
வீரப்பன் இருப்பிடத்தை நக்கீரன் கோபால் நெருங்கி விட்டார் என கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், வீரப்பன் மறைந்துள்ள காட்டுப்பகுதியில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் வீரப்பனை, நக்கீரன் கோபால்சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது வீரப்பன் இருக்குமிடத்தை கோபால்நெருங்கி வருகிறார் என அதிரடிப்படையினர் எனக்குத் தகவல் அனுப்பியுள்ளனர்.
வியாழக்கிழமை இரவுக்குள் வீரப்பனை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.அதன் பிறகு, ராஜ்குமாரை விடுவிப்பது தொடர்பாக நிபந்தனைகள் அடங்கியகேசட்டுடன் கோபால் திரும்புவார் என்று நம்புகிறோம். அதன் பிறகே, வீரப்பனதுநிபந்தனைகள் குறித்துத் தெரிய வரும் என்றார் கிருஷ்ணா.












Click it and Unblock the Notifications