For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்ற விவாதத்தைப் புறக்கணிப்போம்...விக்கிரமசிங்கே அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

புதிய அரசியல் சட்ட திருத்த மசோதா குறித்த விவாதத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரனில் விக்ரமசிங்கேகூறியுள்ளார்.

2 லட்சம் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு குடியுரிமை, அனைத்து இனத்தவர்களுக்கும் சமஉரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய அரசியல் சட்ட திருத்தமசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் பலத்த எதிர்ப்புக்களுக்கிடையே வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இம்மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சந்திரிகா அரசு சட்டதிருத்தமசோதாவைத் தாக்கல் செய்வதில் அதிக அவசரம் காட்டிவிட்டது என்று அவர் குற்றம்சாட்டினார்.

வியாழக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே இந்த அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு தங்கள் கட்சி கடும் எதிர்ப்புதெரிவிப்பதாக அறிவித்தார். இந்நிலையில் சந்திரிகா குமாரதுங்காவின் கட்சிக்கு மசோதா குறித்த விவாதம், மற்றும் வாக்கெடுப்பில் நெருக்கடிஏற்பட்டுள்ளது.

திங்கள்கிழமை இதற்கான விவாதம் நடக்கிறது. விவாதத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகள்மசோதாவுக்கு ஆதரவளிப்பதா? எதிர்ப்பதா? என்று இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. சில தமிழர் கட்சிகளுக்குப் புதிய சட்டதிருத்த மசோதாவில் முழுதிருப்தி இல்லை.

பிளாட் அமைப்பு தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தா, இந்த மசோதாவுக்கு தங்கள் ஆதரவு இல்லை என்று கூறியுள்ளார். டி.யூ.எல்.எஃப் அமைப்பும்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக ஏற்கனவே தெரிவித்து விட்டது. இவ்வளவு எதிர்ப்பையும் தாண்டி அதிபர் சந்திரிகா குமாரதுங்காநாடாளுமன்றத்தில் அரசியல் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

மசோதா தாக்கல் செய்யப்படும் போது நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு கட்சியினர் கோஷமிட்டுக் கூச்சல் போட்டுக் கத்தினர். மசோதாவில்திருப்தியில்லாத ஐக்கிய தேசியக் கட்சி மசோதா குறித்த தாள்களை கிழித்து, எரித்தது. புத்த பிட்சுக்கள், ஜனதா விமுக்தி பெரமானா மற்றும் பலகட்சிகளும் தங்களது பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

மொத்தம் உள்ள 225 எம்.பி.க்களில் அதிபர் சந்திரிகாவின் மக்கள் கட்சியில் 111 எம்.பி.க்கள் உள்ளனர். வாக்கெடுப்பில் வெற்றி பெற சந்திரிகாகட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படுகிறது.

தமிழர் கட்சிகளில் 24 எம்.பி.க்களும், ஐக்கிய தேசியக் கட்சியில் 91 எம்.பி.க்களும் உள்ளனர். எனவே மசோதாவிற்கு தமிழர் கட்சிகள் மற்றும்ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு தேவைப்படுகிது. ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள 7 எம்.பி.க்கள் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இவர்கள் மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தால் ஆளும் கட்சியான மக்கள் கட்சியின் பலம் 118 ஆக உயரும். இந்த மசோதாவுக்கு ஆதரவாகதமிழர் கட்சிகளின் ஆதரவு கிடைத்தாலும் கூட, வாக்கெடுப்பில் வெற்றி பெற இன்னும் 10 எம்.பி.க்களின் ஆதரவு அதிகமாகத் தேவைப்படும்.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை அரசியல் சட்ட திருத்த மசோதா குறித்த விவாதம் நடக்கிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X