பிற தீவிரவாதிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது இந்தியா
ஸ்ரீநகர்:
காஷ்மரில் அமைதியை நிலைநாட்ட, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு போல பிறதீவிரவாத அமைப்புகளும் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று பிரதமர்வாஜ்பாய் கூறியுள்ளார்.
காஷ்மீர் தீவிரவாத அமைப்பான ஹிஜ்புல் முஜாஹிதீன் இயக்கம், மத்திய அரசுடன்பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் அதை எதிர்க்கும் பிற தீவிரவாதஅமைப்புகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த இரண்டு நாட்களில்அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்திய தாக்குதலில் 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பாஹல்கம் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டுத்திரும்பிய பிரதமர் வாஜ்பாய், டெல்லி திரும்பிய பிறகு செய்தியாளர்களிடம்பேசுகையில் பாகிஸ்தானைப் பற்றி எந்தவிதமான குறையும் கூறவில்லை.
வாஜ்பாய் கூறுகையில், அனைத்துத் தரப்பினரும் செவ்வாய்க் கிழமையன்று நடந்தகொலைகளை கண்டிக்க வேண்டும். அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்காவிட்டால்,இது போன்ற தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்க்காவிட்டால் அமைதி சூழ்நிலைஏற்படுவது மிகவும் கடினம்.
பேச்சுவார்த்தை இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டே நடத்தப்பட வேண்டும்என்பது முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது. பேச்சுவார்த்தை நடத்துவதற்குசாதகமான கவுரவமான சூழ்நிலை இருக்க வேண்டும். ஆனால் கடந்த இரண்டுநாட்களாக நிலவி வரும் சூழ்நிலை அவ்வாறு இல்லை என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications