ரெயில் முன் பாய்ந்து தாய்-குழந்தை சாவு

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்:
ரெயில் முன் பாய்ந்து தாயும், குழந்தையும் பலியானார்கள். மற்றொரு குழந்தையின் கை துண்டானது.

திருவாரூர் அருகேயுள்ள மருதம்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ. காய்கறிக் கடை நடத்தி வருபவர். இவருக்குப் பாப்பாத்தி என்ற மனைவியும்,விஜய்கார்த்திக், மாரிமுத்து ஆகிய இரண்டு மகன்களும் இருந்தனர்.

பாப்பாத்தி ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டாள். கூலித் தொழிலாளியான ராஜூவால் அதை நிறைவேற்ற முடியவில்லை. இதனல்கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் வழக்கம்போல் வியாழக்கிழமை இரவும் கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் தன் கணவனுடன் வாழ்வதைக்காட்டிலும் சாவதே மேல் என்று நினைத்தார். தான் இறந்து விட்டால் தனது இரண்டு குழந்தைகளும் அனாதையாகிவிடுவார்களே என்றும்கருதினாள்.

அடுத்தநாள் அதிகாலை 4 மணிக்கு தூங்கிக்கொண்டிருந்த இரண்டு மகன்களையும் எழுப்பி தனது கணவருக்குத் தெரியாமல் வெளியேறினாள். பின்பு அருகிலிருந்தரெயில்வே பாதையில் நின்றாள். அப்போது அதிகாலை 4.30 மணி அளவில் சென்னையிலிருந்து திருவாரூர் நோக்கி கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

அந்த ரயில்முன் தன் இரண்டு மகன்களையும் கட்டிஅணைத்துக்கொண்டு பாய்ந்தாள். இதில் பாப்பாத்தியும், அவரது 3 வயது மகன் விஜய் கார்த்திக்கும் கைதுண்டு, துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இன்னொரு மகன் மாரிமுத்து வலது கை மட்டும் துண்டான நிலையில் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

திருவாரூர் ரயில்வே போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+