அரசியல் சட்டத் திருத்த மசோதா மீது விவாதம் தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

வரலாறு காணாத பாதுகாப்புடன் இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு அதிகசலுகைகள் வழங்கும் புதிய சட்ட மசோதா மீது திங்கள் கிழமையன்று விவாதம்துவங்கியது.

இந்த மசோதா மீதான ஓட்டெடுப்பு, மூன்று நாட்கள் நடக்கவுள்ள விவாதத்திற்கு பின்ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி நடை பெற உள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கியஜனநாயக கட்சி விவாதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என ஏற்கனவேதெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பல்வேறு எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆதரவைப் பெற முடியும் எனஆளுங்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் இதற்காக எம்.பி.களை விலைக்குவாங்கும் முயற்சிகள் நடக்கிறது என்பதை அது மறுத்துள்ளது.

சந்திரிகாவின் அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர்களில் ஒருவரான மஹிந்தாராஜபக்ஷே, இலங்கை அதிபரை சந்தித்து இந்த மசோதாவிற்கு தனது எதிர்ப்பைதெரிவித்தார். இது சந்திரிகா அரசுக்கு கிடைத்துள்ள எதிர்பாராத எதிர்ப்பாககருதப்படுகிறது.

அவருக்குப் பின்னணியில் இருக்கும் புத்தமத பிரிவுகளான மஹாநாயகா மற்றும்அஸ்கிரியா பிரிவைச் சேர்ந்த புத்த மத சாமியார்களை, திங்கள் கிழமை மீண்டும்சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். சில புத்த மத குருமார்கள் இந்த மசோதவைஆதரிப்போர் நடத்தும் மத பூஜைகளில் கலந்து கொள்ள மாட்டோம் என எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

ஜனதா விமுக்தி பெரமுணா மற்றும் புத்த மதகுருக்கள் இந்த மசோதாநடைமுறைபடுத்தப்பட்டால் இலங்கையில் பிரிவினைவாதிகள் வெற்றிக்கு வழிவகுத்து விடும் எனக் கூறி இந்த மசோதாவை எதிர்க்கின்றனர்.

ஜனதா விமுக்தி பெரமுணா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேச நலனைக் கருத்தில்கொண்டு இந்த மசோதாவை எதிர்த்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையே, ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் எதிர்க்கட்சிக்கு சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. அதேபோல மேலும் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கியதேசியக் கட்சி, தங்கள் கட்சியிலிருந்து இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்கள் ஆளும்கட்சியை ஆதரிக்கக்கூடும் என சந்தேகிக்கின்றனர்.

தமிழ் கட்சிகளிடம் மொத்தம் 24 எம்.பிக்கள் உள்ளனர். மசோதாவை ஆதரிப்பதுகுறித்து அவர்கள் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் தமிழர் ஐக்கியவிடுதலை முண்ணனிக் கட்சிக்கு ஐந்து எம்.பிக்கள் உள்ளனர்.இவர்களில் ஒருவர்மசோதாவை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இக்கட்சியைச்சேர்ந்த ஐந்து எம்.பி.களும் மசோதாவை எதிர்த்து வாக்களித்தால் மசோதாதோல்வியடைந்து விடும்.

ஆளும் கட்சிக் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 111 எம்.பி.களே உள்ளனர்.எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிலரின் ஆதரவு, அனைத்து தமிழர் கட்சிகளின் ஆதரவுகிடைத்தாலும் கூட பெரும்பான்மையைப் பெற எட்டு வாக்குகள் குறைவாக இருக்கும்.இந்த நிலையில் இந்த மசோதா வெற்றி பெறுமா என்பது பெரிய கேள்விக்குறியாகவேஉள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+