மாவட்ட ஆட்சி முறையை மாற்ற பாக். முடிவு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் மாவட்ட அளவில் புதிய நிர்வாக முறையை அமல்படுத்த அந்நாட்டின்ராணுவ ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் தலைமையில் நடந்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சனிக்கிழமை நடந்த இக்கூட்டத்தில் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர்கள்,அமைச்சர்கள், ராணுவ கமாண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ம் தேதி நாட்டு மக்களுக்கு இந்த புதியநிர்வாக முறையை முஷாரப் அறிவிப்பார்.
புதிய ஆட்சி நிர்வாக முறைப்படி, மாவட்ட அளவில் தேர்தல் நடத்தப்பட்டுபிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு முழுமையான பொருளாதார,நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்படும். மாவட்ட நிர்வாகத்தை அவர்களே பார்த்துக்கொள்வர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications