Gold Rate Today: பாதாளத்திற்கு பறக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் பெரிய சரிவு! நகை பிரியர்கள் குஷி
சென்னை: சர்வதேச அளவில் நிலவி வரும் குழப்பமான சூழல்கள், அமெரிக்காவில் அதிகரிக்கும் பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்தியாவிலும் இப்போது தங்கம், வெள்ளி என இரண்டுமே கணிசமாக குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.50 குறைந்து, ரூ.1,05,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு மாதமும் உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை, இந்தாண்டு யூடர்ன் போட்டுள்ளது. தங்கம் விலை பெரியளவில் உயரவே இல்லை. அதிலும் குறிப்பாக வளைகுடாவில் மோதல் தொடங்கிய பிறகு தங்கம் விலை சீராக குறைந்தே வருகிறது. இப்போதும் கூட அதே நிலை தான் தொடர்கிறது.

சர்வதேச மார்கெட்
சர்வதேச அளவில் பார்க்கும் போது அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் தொடர்வதாலும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. சர்வதேச மார்கெட்டில் நேற்றைய தினம் ஆரம்பத்தில் தங்கம் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த நிலையில் வர்த்தகமானது. இதற்கு முன்பு தங்கம் விலை ஒரே நாளில் சுமார் 3 சதவீதம் சரிந்திருந்தது. அமெரிக்கா - ஈரான் மோதல் தீவிரமடைந்ததால் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டது. இதுவே தங்கம் விலை சரிவுக்கு காரணமாக இருக்கிறது.
அமெரிக்க வட்டி விகிதம்
அடுத்து அமெரிக்க வட்டி விகிதம். எப்போதும் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயரும்போது தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் குறையக்கூடும். ஏனெனில் தங்கத்தில் இருந்து வட்டி உட்பட எந்தவொரு வருவாயும் இருக்காது. அதே நேரத்தில் வங்கிகள் மற்றும் பத்திரங்கள் போன்ற முதலீடுகள் அதிக வருமானத்தை வழங்கும். இதனால் வட்டி விகிதம் உயரும் என்ற எதிர்பார்ப்பே தங்கம் விலையைச் சரிவின் பாதையில் தள்ளும். இப்போதும் அதுவே நடக்கிறது.
இன்னும் சில நாட்களில் அமெரிக்காவின் ஜூன் மாத பணவீக்க டேட்டா வெளியாக உள்ளது. இந்த பணவீக்க டேட்டாவை வைத்தே அமெரிக்காவில் வட்டி எந்தளவுக்கு உயரும் என்பது ஓரளவுக்குத் தெரிய வரும். ஒருவேளை பணவீக்கம் 2 சதவீதத்திற்கு மேல் அதிகமாக இருந்தால்.. வரும் செப்டம்பர் மாதத்திலேயே கூட வட்டி விகிதம் உயர்த்தப்படலாம். இதனால் தங்கம் விலை மேலும் சரியலாம் என்றே வல்லுநர்கள் கருதுகிறார்கள்..
தங்கம் விலை
நேற்றைய தினமும் கூட தங்கம் விலை கணிசமாக சரிந்ததிருந்தது. நேற்று சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்திருந்தது. இன்றைய தினமும் தங்கம் விலை சரிவு தொடரவே செய்கிறது. இன்றைய தினம் சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து, ரூ.13,150க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.235க்கு விற்பனையாகிறது.
கடந்து வந்த பாதை
14-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,200
13-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,600
12-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,400
11-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,400
10-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,800
9-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,560
8-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,600
7-07-2026- ஒரு சவரன்- ரூ.1,07,200
6-07-2026- ஒரு சவரன்- ரூ.1,08,480
5-07-2026- ஒரு சவரன்- ரூ.1,09,600
4-07-2026- ஒரு சவரன்- ரூ.1,09,600


Click it and Unblock the Notifications
