பேட்மிண்டன் போட்டியில் ராஜ்குமார் ரசிகர்கள் கலாட்டா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரின் ரசிகர்கள் விளையாட்டு மைதானத்தில் புகுந்து கலாட்டாவில் ஈடுபட்டதால்பி.பி.எல். அகில இந்திய ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டி 45 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு பி.பி.எல்.நிறுவனத்தின் பேட்மிண்டன் போட்டி நடைபெறஇருந்தது. போட்டி நடைபெறுவதற்கு முன்பு வீரப்பனின் 10 நிபந்தனைகள் குறித்து நகர் முழுவதும் பரவியது.

இதையறிந்த, ராஜ்குமாரின் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். உடனடியாக மைதானத்திற்குள் புகுந்து தகராறு செய்யத்தொடங்கினர். மைதானத்தில் கூடியிருந்த அனைவரையும் போட்டியை ரத்து செய்யுமாறு கூறினர். ரசிகர்களில்ஒருவர் கூறுகையில், நாங்கள் விளையாட்டுப் போட்டிகளை எதிர்க்கவில்லை. ஆனால் ராஜ்குமார் விடுவிப்பதில்தாமதம் ஏற்படுவதால்தான் இவ்வாறு தகராறு செய்தோம். நாங்கள் யாரையும் காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

இந்த நிலையில், விரைந்து வந்த போலீஸார் ராஜ்குமார் ரசிகர்களைக் கலைத்தனர். பிறகு விளையாட்டுப்போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் போலீசாருடன் ஆலோசனை நடத்தியபின் ராஜ்குமாருக்கு ஆதரவானபேனர்களை மைதானம் முழுவதும் கட்டி விட்டுவிட்டு போட்டியைத் தொடங்கினர்.

போட்டி துவங்குவதற்கு முன்பு பேசிய இந்திய பேட்மிட்டன் அசோசியேஸன் பொதுச்செயலாளர் மணி,ராஜ்குமாரின் ரசிகர்களின் கவலையில் நாங்களும் பங்கு கொள்கிறோம் என்று கூறினார். அதன்பின் 45 நிமிடங்கள்தாமதித்துப் போட்டி தொடங்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+