For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற்றது காஷ்மீர் தீவிரவாத அமைப்பு

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் தாங்கள் அறிவித்த சண்டை நிறுத்தத்தை ஹிஸ்புல் முஜாஹீதின் அமைப்புசெவ்வாய்க்கிழமை வாப்ஸ பெற்றது.

சண்டை நிறுத்தத்தை அறிவித்திருந்த இந்த அமைப்புடன் மத்திய அரசு ஒரு சுற்றுபேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானையும்சேர்த்துக் கொள்ள வேண்டும் என முஜாஹீதீன் நிர்பந்தம் செய்தது. இதை இந்தியாதிட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.

நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமையன்று பேசிய பிரதமர் வாஜ்பாய், ஹிஸ்புல்முஜாஹீதீனுடனான பேச்சுவார்த்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டேஅமையும் என தெளிவுபடுத்தினார்.

இதற்கு முஜாஹீதீன் எதிர்ப்புத் தெரிவித்தது. அமைதிப் பேச்சுவார்த்தைக்காக சண்டைநிறுத்தம் அறிவித்தோம்.ஆனால் அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து இந்திய அரசுபின் வாங்கிவிட்டது என அந்த அமைப்பின் தவைவர் அப்துல் மஜ்ஜித் தரார் குற்றம்சாட்டினார்.

முன்னதாக அவர் கூறியதாவது: ஹிஸ்புல் அமைப்பு சண்டை நிறுத்தத்தை திரும்பப்பெறுவது குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகிறது. அமைதிப் பேச்சு வார்த்தைகாஷ்மீர் மக்களிடையே நம்பிக்கை அளித்து வந்தது. இதுவரை இருந்த கறுப்பு நாட்கள்விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என நம்பிக்கை கொண்டிருந்தனர்.ஆனால்பிரதமரின் அறிவிப்பு பேச்சுவார்த்தையில் பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

வாஜ்பாய் நான்கு நாட்களுக்குள் தனது நிலையை மாற்றிக் கொண்டுவிட்டார். இந்தியத்தலைவர்கள் தங்கள் நிலை குறித்து நிலையான முடிவை தெரிவிக்கவில்லையென்றால்ஹிஜ்புல் அமைப்பு போர் நிறுத்த அறிவிப்பை திரும்ப்பபெறும். இதற்குப் பிறகுஏற்படும் எல்லா விளைவுகளுக்கும் இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும். இந்தியஉள்ளாட்சி அமைச்சகத்துடன் எந்த விதமான ரகசியமான பேச்சு வார்த்தையும்நடத்தப்படவில்லை.

உள்துறை செயலாளர் கமல் பாண்டேயுடன் நேரு விருந்தினர் மாளிகையில் ஆகஸ்டு3-ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு வேறு எந்த பேச்சும் நடத்தவில்லை.

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்துடனான எந்த பேச்சு வார்த்தையும்நடுநிலையாளர்கள் மத்தியிலேயே நடைபெறும்.

ஹிஜ்புல் அமைப்பு காஷ்மீர் பிரச்சனையை பேச்சு வார்த்தையின் மூலம் மட்டுமேதீர்க்கமுடியும் எனக் கருதுகிறது. காஷ்மீர் பிரச்சனை எப்போது வேண்டுமானாலும்துணைக் கண்டம் முழுதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

சண்டை நிறுத்த முடிவு யாருடைய வற்புறுத்தலாலும் எடுக்கப்பட்ட முடிவல்ல. பலமாதமாக யோசித்து எடுக்கப்பட்ட முடிவு.காஷ்மீர் பண்டிட்கள், மற்றும் பாகிஸ்தான்ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் வாழும் முஸ்லிம்களை நலத்தைக் கருத்தில் கொண்டுதான்சண்டை நிறுத்த அறிவிப்பை அறிவித்தோம்,

இந்திய பாகிஸ்தான் அரசுகளுக்கு பிரச்சனையை தீர்த்துக் கொள்வதற்கானசூழ்நிலையையும் நாங்கள் ஏற்படுத்திக் கொடுதுள்ளோம் என்று மஜ்ஜித் தரார்கூறினார்.

இதற்கிடையே இந்த அமைப்பு அறிவித்திருந்த சண்டை நிறுத்தம் செவ்வாய்க்கிழமைஇன்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. ஆனாலும், அமைதிப் பேச்சுவார்த்தைக்குஏதுவாக இந்த சண்டை நிறுத்த அறிவிப்பை இந்த அமைப்பு நீட்டிக்கும் எனஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டே தீர்வுசாத்தியம் என பிரதமர் தெளிவுபடுத்தியதையடுத்து சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க இந்தஅமைப்பு மறுக்கும் எனத் தெரிகிறது.

சண்டை நிறுத்தம் அறிவித்த பிறகும் கூட தங்களது ஆட்களை ராணுவம்தாக்குவதாகவும், ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் முஜாஹீதீன் குற்றம்சாட்டியது. ஆனால், இதை ராணுவம் திட்டவட்டமாக மறுத்தது.

சண்டை நிறுத்தத்தை எதிர்த்து வரும் தீவிரவாதிகள் மீது ராணுவம் ஒரு கண்வைத்துள்ளது. அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந் நிலையில் இந்திய அரசு அதிகாரிகளுடன் ஹிஸ்புல் முஜாஹீதீன் நடத்தியபேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட ஹரியத் மாநாட்டு கட்சியின் செயற்குழுஉறுப்பினர் பசல் ஹக் குரேஷி மீது அந்தக் கட்சி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அனுமதி பெறவில்லை என்று கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

யு.என்,ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X