குபீர்னு ஓடும் பஸ்ஸில் பறந்த துண்டு சீட்டு.. 2 பிள்ளைகளை விட்டுட்டு காதலனுடன் இறங்கி ஓடிய தாய்
சென்னை: 2 குழந்தைகளுடன் இளம் தாய் ஒருவர் அரசு பஸ்ஸில் ஏறியுள்ளார்.. பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்த பெண்ணை காணவில்லை.. ஓடும் பஸ்ஸில் தாயை காணாமல் இரண்டு குழந்தைகளும் கதறி அழ ஆரம்பித்துவிட்டன.. பஸ்ஸுக்குள் கதறி அழுத குழந்தைகளை போலீசார் மீட்டெடுத்துள்ளனர்.. ஆனால் அந்த தாய் என்ன ஆனார்? அதை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் என்ற பகுதியை சேர்ந்தவர் அந்த பெண். கடந்த ஞாயிற்றுக்கிழமை துல்ஜாபூரில் இருந்து சம்பாஜிநகர் நோக்கிச் சென்ற அரசு பஸ்ஸில் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் ஏறினார்..

பஸ் பாதி தூரம் சென்றுகொண்டிருந்தபோது, அந்தப் பெண் திடீர்னு எழுந்து கீழே இறங்கிவிட்டார்.. ஆனால் குழந்தைகளை மட்டும் அவர் பஸ்ஸிலேயே விட்டுச்சென்றார்.. நீண்ட நேரமாக தாயை காணாமல் பஸ்ஸில் இருந்த அந்த இரண்டு குழந்தைகளும் பயந்து கதறி அழ ஆரம்பித்தன.. பஸ்ஸில் குழந்தைகளை கைவிட்ட தாய் இப்படி ஒரு காரியம் செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை..
சட்டைப்பையில் சீட்டு
குழந்தைகளின் அழுகையைப் பார்த்த கண்டக்டர் அவர்களிடம் விசாரித்தார்.. அப்போது குழந்தைகளின் சட்டைப்பையில் ஒரு சிறிய துண்டு பேப்பர் இருப்பது தெரியவந்தது.. அதில், "நான் என் விருப்பப்படி வாழச்செல்கிறேன்.. பிள்ளைகளை தாத்தாவிடம் ஒப்படைத்துவிடுங்கள்.. எனக்கு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக ஊர் சுற்றுவே பிடிக்கும்" என்று அந்த தாய் குறிப்பிட்டிருந்தார்.. அத்துடன் குழந்தைகளின் தாத்தாவின் போன் நம்பரையும் எழுதி வைத்திருந்தார்..
இதையடுத்து கண்டக்டர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.. விரைந்து வந்த போலீசார் பஸ்ஸில் குழந்தைகளை கைவிட்ட தாய் வழக்கில் குழந்தைகளை மீட்டு, குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர்..
துண்டுச்சீட்டில் பெயர்
துண்டுச்சீட்டில் இருந்த போன் நம்பரை வைத்து போலீசார் குழந்தைகளின் தாத்தாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர்.. அவர் வந்தபோது போலீசார் எதிர்பார்த்தது வேறு, நடந்தது வேறு..
பேரக்குழந்தைகளை கண்டு கண்ணீர் விடுவார் என்று நினைத்தால், அந்த தாத்தாவோ, "என் மகள் வீட்டில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள்" என்று பொருட்கள் குறித்தே புலம்பி கொண்டிருந்தார்.. பேரக்குழந்தைகளின் நலனில் பெரிதாக அக்கறை காட்டவில்லை என போலீசார் சொல்கிறார்கள்.
ஓடிப்போன தாய்க்கு தண்டனை?
கள்ளக்காதலனுடன் ஓடிய அந்தப் பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.. குழந்தைகளை பஸ்ஸில் தனியே விட்டு சென்றது தாய்மைக்கே களங்கம் என சமூகத்தில் கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.. மகாராஷ்டிராவில் பஸ்ஸில் குழந்தைகளை கைவிட்ட தாய் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இது போன்ற சம்பவங்களில் குழந்தைகள் நலக்குழு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.. .
இந்தியாவில் குழந்தை கைவிடல் என்பது சட்டப்படி குற்றமாகும்.. Juvenile Justice (Care and Protection of Children) Act - அதாவது சிறார் நீதிச் சட்டத்தின்படி, குழந்தைகளை பொது இடத்தில் கைவிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.. எனவே ஓடிப்போன தாய் கைது செய்யப்பட்டால் சட்டப்படி குழந்தை கைவிடல் வழக்கின் கீழ் வழக்கு பதியப்படும் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.. தன் பிள்ளைகளைவிட கள்ளக்காதலை முக்கியம், அவருடன் உல்லாசமாக ஊர் சுற்றவே பிடிக்கும் என்று இளம்தாய் பகிரங்கமாக சொல்லிவிட்டு போன இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications